2025 ஜூலை 14, திங்கட்கிழமை

புத்தளம் பிரதேசத்தில் புதிதாக 8 கிராம சேவகர் பிரிவுகளை உருவாக்க பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச

Super User   / 2012 மே 30 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் பிரதேசத்தில் புதிதாக எட்டு கிராம சேவகர் பிரிவுகளை உருவாக்குவதற்கு பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் உறுதியளித்துள்ளதாக வட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.

பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் தெதல்லேகேயிட்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பல தரப்பட்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்ட இச்சந்திப்பின் போதே குறித்த உறுதிமொழியினை அமைச்சின் மேலதிகச் செயலாளர் வழங்கியதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குறிப்பிட்டார். குறித்த சந்திப்பு தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

"புத்தளம் மக்கள் நிரவாக ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி விஷேடமாக கலந்துரையாடப்பட்டது. மிக நீண்ட காலமாக புத்தளம் நகரிலுள்ள 4ஆம் வட்டாரம், மணல்தீவு, தில்லையடி ஆகிய கிராமங்களில் அளவுக்கதிமான மக்கள் செறிந்து வாழ்ந்து வருகின்றனர்.

எனவே இக்கிராமங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கிராம சேவகர் பிரிவு மட்டுமே உள்ளது. இதனால் ஒரு கிராம சேவகர் பிரிவுகளில் அளவுக்கு அதிகமான மக்கள் செறிந்து வாழ்வதால் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஆகவே இவ்வாறு ஒரு கிராம சேவகர் பிரிவுகளாக இருக்கும் புத்தளம் 4ஆம் வட்டாரத்தை 4 கிராம சேவகர் பிரிவுகளாகவும் புத்தளம் மணல்தீவு கிராமத்தை இரண்டு கிராம சேவகர் பிரிவுகiளாகவும் புத்தளம் தில்லையடியில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளையும் புதிதாக இணைத்துக் கொள்ளவேண்டும்.

இதனால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் அமைச்சின் செயலாளருக்கு எமது குழு எடுத்துக் கூறியது. எமது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சின் செயலாளர் உடனடியாக அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இதன் காரணமாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கமநெகும, திவிநெகும, மீள்எழுச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஊடாக மக்கள் நன்மை பெறுவார்கள்" என்றார்.

இச்சந்திப்பில் பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத், நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .