2025 மே 15, வியாழக்கிழமை

10 வருடங்களுக்கு ஐ.ம.சு.முவே ஆட்சியிலிருக்கும்: நாமல் எம்.பி

Super User   / 2013 செப்டெம்பர் 09 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இக்பால் அலி


வியாபாரத்துறையில் முஸ்லிம்கள் மிகச் சிறப்பாக ஈடுபாடு காட்டி வருகின்றனர். ஆனால், அரசியல் துறையில் இன்னும் தெளிவு பெறாத நிலையில் தோல்வியுற்ற சமூகமாகவே உள்ளனர். ஜனாதிபதி நாட்டின் தலைவர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிதான் அறுதிப் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றிபெற போகின்றது. இந்த அரசாங்கம் தான் இன்னும் 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்யப் போகின்றது. எனவே, தோல்வியடையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்களிப்பதில் எந்த விமோசனமுமில்லை. நன்கு திறன்படச் சிந்தித்து அரசாங்கத் தரப்பில்  போட்டியிடும் ஒரு முஸ்லிம் பிரதிநிதி ஒருவரைப் பெற்றி பெறச் செய்ய முன்வருமாறு  ஹம்பாந்தோட்டைப் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்கோள் விடுத்தார்.

பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில் மதியாலைப் பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் சத்தாரை ஆதரித்த நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொணடு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

"30 வருட கால கொடூர யுத்தத்தில் முஸ்லிம்களுடைய வியாபார மற்றும் சமய நடவடிக்கைகள் என்பன பாரியளவு தடைபட்டுள்ளதை நாங்கள் நன்கு அறிவோம். யுத்த நிறைவுக்குப் பிற்பாடு தங்களுடைய வியாபார சமய விவகாரங்கள்  நடவடிக்கைகைள் யாவும் சுமூகமான முறையில் மிகவும் சிறப்பாகச் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கை பாரிய அபிவிருத்தி முன்னேற்றங்களைக் கண்டு வருகின்றது.  இலங்கையில் இனங்களுடைக்கிடையே வெளி நாட்டு தீய சக்திகள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு சதித் திட்டங்களை மேற்கொணடு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


சமயங்களுக்கிடையே மதவாதப் பிரச்சினைகளை உண்டு பண்ணி ஒற்றுமையாக வாழுகின்ற மக்களைப் பிரித்து நாட்டின் ஸ்தீரத்தன்மையை இல்லாமற் செய்வதற்கு  முயற்சிகள் மேற்கொள்கின்றார்கள்.  சிங்கள . தமிழ் , முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்த ஒற்றுமையை சீர் குலைப்பதற்கு எமது நாட்டின் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.

குருநாகல் மாவட்டத்தில்  ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வாழுகின்றனர். அவர்களுடைய தேவைகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்தவற்கு உங்கள் மாவட்டத்தில் போட்டியிடும் ஒரே வேட்பாளர் அப்துல் சத்தாரை வெற்றிபெறச் செய்வதன் மூலமே உங்களது பிரதேசங்களுடைய கல்வித் தேவைகளையும் கிராம அபிவிருத்திகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் இந்திக பண்டார, குளியாப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் முஹமட் இர்பான், பிங்கரிய பிரதேச சபை உறுப்பினர் ரிசான், இப்பாகமவ பிரதேச சபை உறுப்பினர் பாஹீம் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .