2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

12,000 கிலோ கடத்தல் இரும்புகளுடன் 6 சந்தேக நபர்கள் புத்தளத்தில் கைது

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 28 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம், கருவலகஸ்வௌ பகுதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்றிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 12,000 கிலோகிராம் நிறையுடைய ரயில் தண்டவாள இரும்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து வத்தளை பிரதேசத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியிலிருந்தே மேற்படி கடத்தல் இரும்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனையவர் வவுனியாவைச் சேர்ந்தவரென்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வௌ பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .