Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி பொலன்னறுவையில் வைத்து கடத்தப்பட்ட புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் நம்பிக்கையாளரும்இமுன்னால் கிராம அதிகாரியுமான பட்டானி றாசிக்கை விடுதலை செய்யுமாறு கோரி இன்று மதுரங்குளி சமீரகமவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணித்தியாலம் வரை இடம்பெற்றது. இதpல் பெரும் எண்ணிக்கையிலான பெண்களும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்களை பொலிஸார் கைது செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
22 minute ago
55 minute ago
1 hours ago
21 Jul 2025
Mohamed Razmi Saturday, 16 October 2010 02:35 AM
கடத்தப்பட்டுள்ள ராசிக்கை விடுவிப்பதற்கு சமூக நம்பிக்கை நிதியம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
Reply : 0 0
SilMu Saturday, 16 October 2010 03:05 AM
சமூக நம்பிக்கை நிதியம் இவ்விடயத்தில் மௌனம் காக்கிறது. அதன் ஸ்தாபக உறுப்பினர் ஒருவர் கடத்தப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் விடுவிக்கப் படாமலிருப்பதைப் பற்றி எந்தவித கவலையோ அல்லது அவரின் விடுதலைக்கான எவ்வித முயற்சிளில் ஈடுபட்டதாகவோ தெரியவில்லை. சமூக நம்பிக்கை நிதியத்தில் இருந்த ஒரேயொரு புத்தளத்து உறுப்பினர் அவர் என்பதால் இந்த மனப்பான்மையாக இருக்கலாம். காலம் பதில் சொல்லும்.
Reply : 0 0
isham Saturday, 16 October 2010 09:31 PM
பொய் நாடகங்கள் போயயர்கலாலேயே புப்ளிசிட்டி பண்ணப்படுகிறது... உண்மையை அல்லா அறிபவனாக இருக்கிறான் .
Reply : 0 0
noofan Saturday, 16 October 2010 11:24 PM
கடத்தல் நாடகத்தை திசை திருப்ப, மக்கள் மத்தியல் பொய் கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு இருப்பது உண்மையா?
Reply : 0 0
vanampadi Monday, 18 October 2010 12:46 AM
நிறுவனத்துக்குள் நடந்துவந்த ஊழல்களை தட்டிக் கேட்டது மற்றும் இடம் பெயர்ந்தவர்கள் உள்ளூர் மக்களுக்கு செய்து வந்த சதி முயற்சிகளை அம்பலப்படுத்தியது தான் இந்த கடத்தல் நாடகத்தின் காரணமா? இந்த செய்தியை அனுப்பியவர் ஒரு பொதுக் கூட்டத்தில் கூறிய "மேலிடத்து" சம்பந்தம் என்ன?
Reply : 0 0
puttalatan Monday, 18 October 2010 07:13 PM
இது விடயத்தில் வன்னி அரசியல்வாதிகளின் பங்கு என்ன ?
Reply : 0 0
mohamed Monday, 18 October 2010 07:29 PM
சந்தேக நபாரை போலீஸ் இன்னும் என்ன செய்கிரது?
Reply : 0 0
Mariam Monday, 18 October 2010 09:32 PM
இந்த கடத்தல் உள்ளூர் மக்களுக்கு எதிராக மன்னார் மக்கள் ஒரு சிலரால் திட்டமிட்டு மேட்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான சதி முயற்சிகளின் ஒரு அங்கமாகும். அந்த பின்னணியை மூடி மறைத்து யாரையோ காப்பாற்றும் விதத்தில் இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எனவே Daily Mirror போன்ற ஒரு பத்திரிக்கை Investigation Journalist ஒருவர் மூலம் விரிவான ஒரு செய்தியை வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
Reply : 0 0
Mariam Monday, 18 October 2010 09:52 PM
புத்தளம் போலீஸ் அதிகார எல்லைக்கு வெளியே தலைமறைவாகி இருக்கும் "நவ்ஷாத்" ஐ கைது செய்வதில் சட்ட சிக்கல்கள் இருக்குமாயின் அதற்கான மாற்று நடவடிக்கையாக CIB, CID பிரிவகளுக்கு ஊடக அதனை செய்வதற்கு தடையாக இருக்கும் அரசியல் பின்னணி என்ன?
Reply : 0 0
MA Wednesday, 20 October 2010 10:08 PM
Puttalam பிரதேச புத்தி ஜீவிகளை ஒழிக்கும் முயசியை எதிற்கிறோம் புத்தளத்தில் சுரண்டினது போதும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
55 minute ago
1 hours ago
21 Jul 2025