Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
புத்தளம் மாவட்டத்தில் க.பொ.த சாதாரன தரம் மற்றும் உயர் தரம் வரை படித்து முடித்துக் கொண்ட இளைஞர் யுவதிகளுக்கான கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு புத்தளம் இப்னு பதுதா மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.
புத்தளம் பிரதேச செயலகத்தின் அனுசரணையில் மெகா 2010 எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கை சீ.பீ.எஸ் அமைப்பு ஒழுங்குபடுத்தியிருந்தது.
இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை, காப்புறுதி கூட்டுத்தாபனம், பிரித்தானிய கற்கை நிலையம், ஜொப் நெட் அமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் என்பனவற்றின் வளவாளர்கள் இந்த வழிகாட்டல் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
இதன்போது நேர்முகப் பரீட்சைக்கு தோற்ற முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், விண்ணப்பங்கள் நிரப்புதல், மற்றும் பட்டப்படிப்பு மற்றும் துறைசார்ந்த தொழில் தெரிவு குறித்து இங்கு விளக்கமளிக்கப்பட்டன.
புத்தளம், கற்பிட்டி, முந்தல், வண்ணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இதில கலந்து கொண்டனர்.
15 minute ago
48 minute ago
53 minute ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
48 minute ago
53 minute ago
21 Jul 2025