2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முந்தலில் இலவச மருத்துவ முகாம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

முந்தல் பிரதேச செயலக சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் இலங்கை லிபிய தூதரகத்தினால் உடப்பு மற்றும் முந்தல் ஆகிய பிரதேசங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை உடப்பு சனசமூக நிலையத்திலும், நேற்று சனிக்கிழமை முந்தல் பௌத்த விகாரையிலும் இந்த மருத்துவ முகாம்கள் இடம்பெற்றன.

இந்த மருத்துவ முகாமில் இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நோய்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டதுடன், ஏனைய சகல நோய்களுக்குமான சிகிச்சைகளும் வைத்தியர்களினால் வழங்கப்பட்டன.

இந்த மருத்துவ முகாமில் இரண்டு வைத்தியர்களுடன், தாதியர்களும், மருத்துவ உதவியாளர்களும் கலந்து கொண்டனர்.

உடப்பில் இடம்பெற்ற இம்மருத்துவ முகாமில் 416 நோயாளர்களுக்கும், முந்தலில் 186 நோயாளர்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டதாக முந்தல் பிரதேச செயலக சமூக அபிவிருத்திப் பிரிவின் அதிகாரி என்.எம்.நியாஸ் தெரிவித்தார்.

முந்தல் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக்கின் ஏற்பாட்டில் இந்த இலவச மருத்துவ முகாம்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .