Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடமேல் மாகாணத்தின் அதி சிறந்த பஸ் நிலையமாக புத்தளம் பொது பஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை குருநாகல் நகர மண்டபத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் இந்த பஸ் நிலையத்தை அமைத்த புத்தளம் நகர சபைக்கு 75 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும்,சான்றிதழுடன் விருதும் வழங்கப்பட்டது.
வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ.ஆர்.பலல்ல பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த விருதினை புத்தளம் நகர சபை தலைவர் என்.எம்.எம்.நஸ்மியிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜயசிங்க மற்றும் அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்களுடன் முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எச்.எம்.நவவி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த பஸ் நிலையத்தை அமைக்க தேவைப்பட்ட 100 மில்லியன் ரூபாய்களும், அரச நிதியன்றி வர்த்தககர்களிடமிருந்து அறவிட்டு நவீன பஸ் தரிப்பு நிலையம் அமைக்கப்பட்டமையே இதன் சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் சிறந்த மாநகர சபையாக குருநாகல் மாநகர சபையும், சிறந்த நகர சபையாக குளியாப்பிட்டி நகர சபையும், சிறந்த பிரதேச சபையாக வென்னப்புவ பிரதேச சபையும் தெரிவு செய்ய்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
26 minute ago
59 minute ago
1 hours ago
21 Jul 2025
riyas Sunday, 31 October 2010 06:31 PM
உண்மையில் வரவேற்க வேண்டிய விடயம்தான் ....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
59 minute ago
1 hours ago
21 Jul 2025