Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். எம்.மும்தாஜ், இர்ஷாத் றஹ்மத்துல்லா)
புத்தளம் மாவட்ட கடற்றொழில் மகா சம்மேளனத்தின் மாநாடு இன்று சனிக்கிழமை புத்தளம் ஐ.பீ.எம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 10.20 மணிக்கு ஆரம்பமான இம்மாநாட்டில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
புத்தளம் மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அநுர ஜயசேகர தலைமையில் இம்மாநாடு இடம்பெற்றது. புத்தளம், முந்தல், கல்பிட்டி, வண்ணாதவில்லு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான கடற்றொழிலாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன,
கடற்றொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல்வேறு முக்கிய வேலைத் திட்டங்களை அரசு முன்னெடுத்து வருவதாகவும், கடற்றொழிலாளர்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தக் கூடிய வசதிகள் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் எண்டனி பெரேரா, வட மேல் மாகாண கடற்றொழில் அமைச்சர் சனத் நிஷாந்த, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என். டி. தாஹிர், சிந்தக மாயாதுன்ன உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
21 minute ago
54 minute ago
59 minute ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
54 minute ago
59 minute ago
21 Jul 2025