2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாண நிகழ்வினையொட்டி புத்தளத்தில் வைபவம்

Super User   / 2010 நவம்பர் 03 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாண நிகழ்வினையொட்டி புத்தளத்தில்  பல்வேறு வைபவங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கே. ஏ. பாயிசின் தலைமையில் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 22ம் திகதி வரை புத்தளம் தொகுதியிலுள்ள சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேசிய கொடிகளைப் பறக்க விடுவதெனவும்,  18ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை அரச நிறுவனங்கள் மின் விளக்குகளால் அலங்கரிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வரும் 18ஆம் திகதி ஜனாதிபதியின் பிறந்த தினமாதலால் அன்றைய தினம் அவருக்கு ஆசி வேண்டிய பல்வேறு சமய வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை புத்தளம் தொகுதியிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகள் தோறும் சிரமதானப் பணிகளும், மர நடுகை வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .