2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இரவோடு இரவாக பிடுங்கி எறியப்பட்ட மரங்கள்

A.P.Mathan   / 2010 நவம்பர் 16 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி ஏற்பை முன்னிட்டு நேற்று தம்புள்ளை மொஹான் ஜயமகா வித்தியாலயத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளை இரவோடு இரவாக இனந்தெரியாத சில நபர்கள் பிடுங்கி எறிந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை பாடசாலைக்கு வந்த மாணவர்கள் நேற்று தாம் நட்ட மறக்கன்றுகள் காணாமல் போயுள்ளதை கண்டு, பாடசாலை அதிபரிடம் கூறியுள்ளனர், பின்னர் இது சம்பந்தமாக பாடசாலை அதிபர், தம்புள்ளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .