2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ரயில் மிதிபலகையில் பயணித்த குடும்பஸ்தர் தவறி விழுந்து பலி

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 19 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி சென்ற ரயிலின் மிதிபலகையில் நின்றுகொண்டு பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் ரயில் தரிப்பு கொங்கிறீட் படியில் தவறி விழுந்த நிலையில்,  ரயில் மோதியதால்  ஸ்தலத்திலேயே பலியானார்.

இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு பங்கதெனியவில் இடம்பெற்றதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பலியான குடும்பஸ்தர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஹம்மத் மிஹ்றாஜ் புத்தளம் தில்லையடி அல்-மினாபுரத்தை வசிப்பிடமாக கொண்டரென பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேற்படி குடும்பஸ்தர் நீர்கொழும்பிலுள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு  அங்கிருந்து  புத்தளம் நோக்கி திரும்புகையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று வெள்ளிக்கிழமை மாலை புத்தளம் தில்லையடி மையவாடியில் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .