2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கட்டாரில் இலங்கையர் கொலை

Super User   / 2010 நவம்பர் 22 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

கட்டார் வைத்தியசாலை ஒன்றில் சேவையாற்ற  சென்ற நாத்தாண்யடி, துக்கன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்தவரொருவர் இலங்கையைச் சேர்ந்த சிலரினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குறித்த நபரின் மனைவி இன்று மாராவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.

மஹிந்த ஹேரத் எனும் 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையைச் சேர்ந்த 12 பணியாளர்கள் கட்டார் நாட்டில் அறை ஒன்றில் குடியிருந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட கைகலப்பில் குறித்த நபர் மற்றவர்களால் தாக்கப்பட்டதாக புகாரிடப்பட்டுள்ளது.
 

 

 


  Comments - 0

  • KUMARAN Tuesday, 23 November 2010 09:59 PM

    வெளிநாடு வந்து சிலர் எல்லாமே மறந்து பல வகையான பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டு குறிப்பாக கறுப்பு சந்தையில் மதுபானங்கள் பெற்று உபயோகித்தல், இதனை பாவித்துவிட்டு வேண்டாத தகாத நடவடிக்கைகள் தான் இது போன்ற சம்பவங்களுக்கு காரணம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .