2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மழையால் யாழ். முஸ்லிம்கள் மீளக்குடியேற முடியாத நிலை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 26 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

தற்போது பெய்துவரும் அடை மழையையடுத்து, புத்தளத்திலிருந்து மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு மீளக்குடியேறுவதற்காக செல்லவிருந்த மக்கள் அங்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது.

புத்தளம் பாலாவி மலீஹாபுரத்தை சேர்ந்த 8 குடும்பங்களிலுள்ள 20 பேர் யாழ்ப்பாணத்துக்கு மீளக்குடியேறுவதற்காக செல்லவிருந்தனர். தற்போது பெய்து வரும் மழையால் இவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்காக தமது பொருட்களை வாகனத்தில் ஏற்றிய நிலையில், அங்கு செல்லமுடியாது புத்தளத்திலேயே தரித்துள்ளனர்.


இவர்கள் புத்தளத்தில் பெற்றுவந்த உலர் உணவு நிவாரணம் மற்றும் ஏனைய பதிவுகளை வடக்கு முஸ்லிம்களுக்கான செயலகத்திலிருந்து நீக்கி, யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறவிருந்தனர்.  


தற்போது பெய்து வரும் மழையையடுத்து,  அங்கு மீள்குடியேறுவதில் சிரமம் காணப்படுவதாகவும் அக்குடும்பங்கள் தெரிவித்தன. அத்துடன், யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கு தங்குமிட வசதிகள் இல்லையென்றும் அம்மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .