2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் பதுரு சமான் முஹம்மட் ரில்ஷான் வெற்றி

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 28 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் முந்தல் பிரதேச செயலகப் பிரிவிற்கான இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக பதுரு சமான் முஹம்மட்ட ரில்ஷான் வெற்றி பெற்றுள்ளார். .


முந்தல் பிரதேச செயலகப் பிரிவின் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக மூவர் போட்டியிட்டனர். இதில் விருதோடை 'யுனைடெட் யூத் க்ளப்' சார்பில் போட்டியிட்ட முஹம்மட் ரில்ஷான் 149 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

இத்தேர்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதுரங்குளி சிங்கள மாதிரி மகாவித்தியாலயத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது. இதில் ஆர்.பி.சுகந்த சாமர பதிரகே மற்றும் யூ.யூ.கமால் தேசப்பிரிய ஆகியோரும் போட்டியிட்டு முறையே 138, 33 வாக்குகளைப் பெற்றனர். 11 மேலதிக வாக்குகளினால் முஹம்மட் ரில்ஷான் வெற்றி பெற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .