2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பத்துளு ஓயா பிரதேசத்தில் வாகன விபத்து; ஒருவர் பலி

Super User   / 2010 நவம்பர் 28 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

சிலாபம் புத்தளம் வீதியில் பத்துளு ஓயா பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ அலவத்த தெரிவித்தார்.

இன்று மாலை 5.30 மணியளவில் சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கி வந்த கார் ஒன்றும் புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழந்துள்ளதுடன், காரும் மோட்டார் சைக்கிளும் பாதையிலிருந்து விழகி கால்வாயில் வீழ்ந்துள்ளது.

 காரில் வந்ததாக தெரிவிக்கப்படும் மூவரை காணவில்லை என்றும், அவர்கள் அவ்விடத்தை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .