2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இந்திய இளைஞனின் மரண விவகாரம்; சந்தேகநபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

Super User   / 2010 நவம்பர் 30 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

இந்திய இளைஞனான டி.செல்வராஜின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி சந்தன புஷ்பலால் சில்வா மற்றும் கிருலப்பனையிலுள்ள  உணவகமொன்றின் உரிமையாளர் மரியநாயகம் லெஸ்லி ராஜ்குமார் ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய சேசிரி ஹேரத் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார்.

இந்திய இளைஞனின் மரணம் தானாக கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டதால் ஏற்பட்டதென சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து இவ்வழக்கை நடத்திச் செல்வது தொடர்பில் சட்டமா அதிபரின் அறிக்கை கிடைக்கும் வரையே இவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உணவகத்தில் சமையல்காரராகப் பணியாற்றிய இந்திய இளைஞனான டி.செல்வராஜ் என்பவரின் இறந்த உடலை கடந்த ஜூன் 27ஆம் திகதி முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு கடலில் வீசிவிட்டு தப்பிச் சென்ற வேளை முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி சந்தன புஷ்பலால் சில்வா மற்றும் உணவகத்தின் உரிமையாளர் மரியநாயகம் லெஸ்லி ராஜ்குமார் ஆகியோர் முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .