2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

யானை – மனிதர்கள் மோதலை தடுக்க நடவடிக்கை

Super User   / 2010 டிசெம்பர் 01 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

இலங்கையில் யானை – மனிதர்கள் மோதலைத் தடுப்பதற்காக வனப்பகுதிகளில் யானைகளுக்குத் தேவையான உணவு மற்றும் நீரினைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

யானை மனிதர்கள் மோதலைத் தடுப்பதற்கு மின்சார வேலிகள் மாத்திரம் அமைப்பது போதுமானதாக இல்லை எனவும் வனப்பகுதிகளில் யானைகளுக்குத் தேவையான உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக வனப்பகுதிகளில் உணவுத் தாவரங்களை வளர்க்கவும் தேவையான நீர்நிலைகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்திரசேன மேலும் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .