2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புத்தளம் நகரில் ஆங்காங்கே குப்பைகளை வீசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 02 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் பிரதேசத்தில்  குப்பைக் கூலங்களை அதெற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வீசத் தவறுவோருக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் வேண்டுகோளின் படி நகரங்களை சுத்தமாக வைக்கும் திட்டத்தின் கீழ் புத்தளம் நகரிலுள்ள  குப்பைக் கூலங்களை  புத்தளம் நகர சபை ஊழியர்கள் அகற்றும் அதேவேளை  புத்தளம் பொலிஸார் புத்தளம் நகரை அசுத்தப்படுத்துவோருக்கு எதிராக  சட்ட நடவடிக்கைகளை எடுத்தும் வருகின்றனர்.

குப்பை கூலங்களை  ஆங்காங்கே வீசுவோரை இனம்கண்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றததில் வழக்குத் தாக்கல் செய்யப்ப்ட்டு தண்டனையும் வழங்கப்படுகின்றது. குப்பை கூலங்களை அதெற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில்  இட  தவறுவோர் நாளொன்றிற்கு மூவர் வீதம் இனம் காணப்படுகின்றனர்.  

அவர்களுக்கு எதிராக  வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. ரூபா 10,000 முதல் ரூபா 15,000 வரை தண்டப் பணம் விதிககப்படுகின்றது.

புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச  சபை, பொலிஸ் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, புத்தளம் வர்த்தக சங்கம், புத்தளம் பெரிய பள்ளி ஆகிய அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து  புத்தளம் நகரை சுத்தமாக வைக்கும் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றன.

பொலிஸாரின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து புத்தளம் நகரில்   ஆங்காங்கே  குப்பை கூலங்களை வீசும்  நடவடிக்கை குறைவடைந்து புத்தளம் நகர், குப்பை கூலங்கள் அற்ற நகரமாக  மாறி வருகின்றது.


  Comments - 0

  • riyas Thursday, 02 December 2010 04:31 PM

    நல்ல விடயம் இருப்பினும் குப்பைகளை சுத்தம் செய்வோர் தவறாமல் வரவேண்டும் அதோடு வடிகால் அமைப்பும் குறை இல்லாமல் இருந்தால் புத்தளம் சுத்தமான நகரம் மட்டும் அல்லாமல் சுகாதாரமான நகரமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    Reply : 0       0

    Naushard Saturday, 04 December 2010 12:25 AM

    சரியாக சொன்னீர்கள் ரியாஸ்.பூத்துக்குலுங்கும் புத்தளத்தை பார்க்க ஆசையாக உள்ளது .!!!!!!!.l

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .