2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புத்தளம் யுவதிகளுக்கு சுயதொழில் பயிற்சி திட்டம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 02 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளம் பகுதியில் வதியும் படித்தஇவேளையற்ற இளம் யுவதிகளுக்கு சுயதொழில் முயற்சிகளில் பயிற்சி வழங்கும் திட்டத்தினை புத்தளத்தில் இயங்கும் அரசார்பற்ற நிறுவனமாக சமூக நம்பிக்கை நிதியம் ஆரம்பித்துள்ளதாக நிதியத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர்.எம்.என்.எம்.ஹிஜாஸ் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் தொழிலற்ற யுவதிகளுக்காக உயர் ரக பொம்மைகள் தயாரிப்பதில் பயிற்சிகள்  வழங்கப்படுவதாக தெரிவித்த இணைப்பாளர்இஇதற்கென 30 யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இருமாத பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாகவும் கூறினார்.

பயிற்சிகளை உரிய முறையில் முடித்துக் கொள்ளும் யுவதிகளுக்கு பொம்மைகள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் வழங்கப்பட்டு சுயமாக தொழில் புரியும் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .