Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 03 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த 12 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான வசதிகளை செய்துகொடுத்த புத்தளம் பாடசாலைகள் தரம் உயர்த்தப்படவேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பென புத்தளம் வலய தமிழ் பாடசாலைகளுக்கான பணிப்பாளர் எம்.எம்.சியான் தெரிவித்துள்ளார்.
முன்மாதிரியான பாடசாலையாக தில்லையடி பாடசாலை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சகல துறைகளிலும் சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை அதிபர் எஸ்.எஸ்.எம்.ஹூதைலீன் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இப் பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். அதேபோல் புலமைப் பரிசில் பரீட்சையில் கூடிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இது நல்ல வளர்ச்சியாகும்.மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. ஆசிரியர்கள் பெற்றோர்களால் மதிக்கப்படவேண்டும் என்றும் பணிப்பாளர் எம்.எம்.சியான் கூறினார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago