2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிரேஷ்ட அமைச்சர் பௌசி தில்லையடிக்கு விஜயம்

Super User   / 2010 டிசெம்பர் 04 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

நகர அபவிருத்தி சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் தில்லையடிக்கு விஜயம் செய்தார்.

இதன்போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மாணவர்கள் கல்வி பயிலும் ரத்மல்யாய றிசாட் பதியுதீன் மகா வித்தியாலயத்துக்கு சென்ற அமைச்சர் பௌசி பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் அமைச்சர் பௌசி முஹாஜிரீன் அரபுக் கல்லூரிக்கு சென்று மார்க்க கல்வியினை பயிலும்  மாணவர்களையும் சந்தித்தார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன், வடக்கு முஸ்லிம்களுக்கான செயலக உதவி ஆணையார் எம்.மதீன்,அமைச்சரின் இணைப்பு செயலாளர் பீ.எம்.றியாஜ் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .