2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மழையினால் தம்புள்ளை வைத்தியசாலை பாதிப்பு

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 04 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தம்புள்ளை பிரதான வைத்தியசாலையின் இரண்டு வாட்டுகள் இன்று மாலை நீரில் மூழ்கியுள்ளதாக தம்புள்ளை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் என்.எம்.எம்.இக்பால் தெரிவித்தார்.

தற்போது ஆறு மற்றும் ஏழாம் வாட்டுகளே இவ்வாறு நீரிழ் மூழ்கியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மத்திய மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் பெய்துவரும் கடும் மழை காரணமாக மேலும் நீர்மட்டம் உயரக்கூடும் எனவும் அவ்வாறு நீர் மட்டம் உயர்ந்தால் வைத்தியசாலையின் வாட்டுகளின் நீர்மட்டம் மேலும் உயரலாம் எனவும், அவ்வாறு உயர்ந்தால் நோயாளிகளை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றம்செய்ய நேரிடும் எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .