2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கஜமுத்துகள் விற்ற குற்றச்சாட்டில் பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில்

Super User   / 2010 டிசெம்பர் 23 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

கஜமுத்துகள், சிறுத்தை தோல், சிறுத்தை பற்கள் என்பனவற்றை விற்பனை செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஹொரவபொத்தானை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஜனவரி 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கறுவாத்தோட்டப் பகுதியில்  வைத்து   கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர் மேற்படி பொருட்களை அநுராதபுரத்திலிருந்து கொழும்புக்கு கொண்டுவந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கொழும்புக்கு கொண்டு வந்த பொதியில் என்ன இருந்தது என்பதை அறிந்திருக்கவில்லை எனவும் ஹொரவப்பொத்தானையில் வைத்து மற்றொரு நபரால் கொழும்பிலுள்ள ஒருவருக்கு ஒப்படைப்பதற்காக அப்பொதி கொடுக்கப்பட்டது எனவும்  சந்தேக நபரின் சட்டத்தரணி தனது வாதத்தில் தெரிவித்தார். தனது கட்சிக்காரரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறும் அவர் கோரினார்.

எனினும் சந்தேக நபரை 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமறு நீதிபதி உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .