Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜனவரி 05 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
முந்தல் பிரதேச செயலகப் பிரிவின் புதிய மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் இன்று காலை முந்தல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
முந்தல் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முந்தல் பிரதேச புதிய மத்தியஸ்த சபையின் தலைவராக புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.நிமல்சிறி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வைபவத்தில் தலைவர் உட்பட 15 பேர் நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர். இவர்களுள் ஒரு தமிழரும் இரு முஸ்லிம் உறுப்பினர்களும் அடங்குகின்றனர். இம்மத்தியஸ்த சபையின் பதவிக்காலம் மூன்று வருடங்களாகும்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் மற்றும் முந்தல் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
இவ்வைபவத்தில் முந்தல் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் கிராம அதிகாரிகள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago