2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கடத்தப்பட்ட பட்டானி றாசிக் தொடர்பில் அவரது மகன் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம்

Super User   / 2011 ஜனவரி 07 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட தனது தந்தையான முன்னாள் கிராம அதிகாரி பட்டானி றாசிக் தொடர்பில் இது வரைக்கும் எவ்வித தகவல்களும் இல்லை என அவரின் புதல்வர் பிரஸ்கான் தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் புத்தளம் மாவட்ட அமர்வில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,

மன்னார் எருக்கலம்பிட்டியை சேர்ந்த நௌசாத் என்பவர் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

எனினும் குற்றவாளியென்று அடையாளம் காணப்பட்டுள்ள இவர் கைது செய்யப்படவில்லை.

அதன் பின்னணியில் அரசியல் சக்தி இருப்பதாகவே கருதுகின்றோம்.

புத்தளத்தில் இடம்பெயாந்த மற்றும் உள்ளூர் மக்களுக்கிடையில் சில பிரச்சினைகள் இருந்துவருகின்றது.

தற்போது எனது தந்தையின் கடத்தலுடன் அது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

சமுகத்துக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக புத்தளம் பெரிய பள்ளிவாசல் மற்றும் மாவட்ட ஜமிய்யத்துல் உலமா சபை என்பன தலையிட்டு நிலைமையினை கட்டுப்படுத்தியுள்ளது.

இன்று எனது பெற்றோரை  தேடும் பணியினை மேற்கொண்டுள்ளோம். எமக்கு எதிராக தொடர்ந்தும் கடத்தல் காரர்களினால் அச்சுறுத்தல்கள் வந்தவண்ணமிருக்கின்றதாக அவர் கூறினார்.

இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த குடும்ப உளவளத் துணையாளரும் கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியருமான ஏ.றியாஸ்,

தற்போது மூடப்பட்டுள்ள மன்னார் புத்தளம் பாதையினை திறந்து மன்னார் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு உதவி செய்ய வேண்டும.

1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது முதல் இன்று வரை முஸ்லிகள் பாரம்பரியமாக வாழந்த காணிகள் வேறு நபர்களுக்கு அரச அதிகாரிகளின் உதவியுடன் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது எமது மீள்குடியேற்றம் இடம் பெறுகின்ற போது தாங்கள் வாழ்வதற்கான காணிகள் அங்கில்லை. இந்த நிலையில் எமது மீள்குடியேற்றம் கேள்வி குறியாகியுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .