Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம், கற்பிட்டி கண்டல்குளி கரையோரத்தை சுத்தம் செய்யும் பணி நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அனுசரணையுடனும் கடல் மற்றும் கரையோரவள பாதுகாப்பு ஸ்தாபனத்தின் ஒருங்கிணைப்பின் உதவியுடனும் கண்டல்குளி கரையோரப்பகுதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
கல்பிட்டி அல் அக்ஸா, கண்டல்குளி சிங்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மீன்பிடி சங்கங்கள் உட்பட 60 பேர் இந்த சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
செப்டெம்பர் மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கரையோரத்தை சுத்தம் செய்யும் தினமாக பிரகடனப்படுத்தி 26ஆவது வருடமாக உலகெங்கிலும் நிகழ்வுகள் பல இடம்பெறுகின்றன.
இதற்கமைய இலங்கையில் சுற்றாடல் அமைச்சின் கீழியங்கும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அனுசரணையுடன் பல இடங்களில் கரையோரத்தை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Jaleel JP Wednesday, 14 September 2011 06:49 PM
ஏன் சார் அதற்கும் பாடசாலை பிள்ளைகள் தான்? கட்பிட்டி பிரதேச செயலகத்துகுட்பட்ட சமிதிகள் மூலம் செய்யலாமே?.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
8 hours ago
8 hours ago