2025 மே 26, திங்கட்கிழமை

ஸியாரம் உடைப்பின் பின்னணியில் ஜே.வி.பி: அலவி மௌலான குற்றச்சாட்டு

Super User   / 2011 செப்டெம்பர் 14 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அநுராதபுரம் – குருணாகல் வீதியில்- அநுராதபுரம் பழைய நகரத்தில் அமைந்திருந்த மிக பழமை வாய்ந்த முஸ்லிம் ஸியாரம் (சமாதி) உடைக்கப்பட்டதன் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டதாக மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலான தெரிவித்தார்.

அநுராதபுரம் – குருணாகல் வீதியிலுள்ள அநுராதபுரம் பழைய நகரத்தில் அமைந்திருந்த மிக பழமை வாய்ந்த ஸியாரம் கடந்த சனிக்கிழமை பௌத்த பிக்குகள் அணியும் காவி நிற உடையுடனான சிலரின் பங்குபற்றலுடன் உடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் ஆளுநர் அலவி மௌலானவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் பௌத்த பிக்குகள் அணியும் காவி நிற உடையுடன் சென்றே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் தான் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடமும் முறையிட்டுள்ளேன். அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.

இது தொடர்பில் தெவடஹாக ஜும்ஆ பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளரும் வட அமெரிக்க இஸ்லாமிய ஒற்றுமை முன்னணியில் தலைவருமான றியாஸ் சாலியுடன் தொடர்புகொண்டு வினவிய போது

இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது. அநுராதபுர பிரதேசத்திலிருந்து இது தொடர்பில் எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை. நாம் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட பின்னரே இது தொடர்பில் தெரியவந்தாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி:

'ஸியாரம் உடைக்கப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்'


You May Also Like

  Comments - 0

  • UMMPA Friday, 16 September 2011 01:39 AM

    நமக்கு முக்கியம் முஸ்லிம்களின் அடையாளப்படுத்தப்பட்ட இடம் அது எனவே நமக்குள் பிரச்சினை நாம் தீர்த்துக்குவோம். உடன் பள்ளி கட்ட நமது ஒற்றுமை வேண்டும்.

    Reply : 0       0

    M H Thursday, 15 September 2011 07:56 PM

    இஸ்லாம் வணக்கம் வழிபாடு எல்லாம் அல்லாஹ் ஒருவனுக்கே.

    Reply : 0       0

    anilar Thursday, 15 September 2011 08:35 PM

    அப்ப JVP உடைச்சா பொலிஸ் பாதுகாப்பு யாரு கொடுத்தா அலவி Sir.

    Reply : 0       0

    xlntgson Thursday, 15 September 2011 08:55 PM

    இலங்கையில் அநேகமான பள்ளிவாயில்கள் சியாரம் சார்ந்தவையே, அவற்றையெல்லாம் உடைக்க எத்தனமோ? எத்தனை சாலை ஓர வணக்கத்தலங்கள் முஸ்லிம்களுடையவை, கணக்கு எடுத்துப் பார்த்தால் தெரியும்! சந்திக்கொரு வணக்கத்தலம் முஸ்லிம்களுக்கு வைத்துக் கொள்ள இயலாது. பிரிவு எதாக இருந்தாலும், கப்ரு வணக்கம் வேறு கப்ருகளை கட்டுவது பாதுகாப்பாக இருக்கலாம். கப்ரு கட்டுவது குப்ரியதுக்கடையாளம் என்றால் உலகில் அதிகமான முஸ்லிம்கள் இதை செய்த பாவிகளே. அவர்கள் எல்லாரும் முஸ்லிம்கள் இல்லையென்றால் அதை உழுது பயிரிட வேண்டும் என்றால் நபியின் கப்ர்..

    Reply : 0       0

    Mark Wilson Thursday, 15 September 2011 08:56 PM

    sadath முதலில் இஸ்லாத்தை படிக்கட்டும்....... அப்புறம் பேசவும்....

    Reply : 0       0

    sadath Thursday, 15 September 2011 09:16 PM

    சியாரம் என்பது மூமின்கள் விவகாரம், முஸ்லிம்களுக்கு தெரிய விளங்கி எடுக்க கஷ்டமானது , இலங்கைக்கு விஜயம் செய்த இப்னு பதுதா பாபா ஆதம் மலைக்கு சென்று சியாரத் செய்தார் என்று வரலாறு சொல்கின்றது, வெறும் கண்களால் புலன் அறிவுகளால் புரிய முடியாத பொக்கிஷம் அடக்கம் பெற்ற இந்த நல்ல அடியார்கள், கருத்து சொல்வவர்கள் அல்குர் ஆணை புரட்டி படிக்கவும்!உடைத்தவர்கள் மனதில் இருந்தது முஸ்லிம்களை வேதனை படுத்த வேண்டும் என்பதே, பள்ளிவாசல் என்றே உடைத்தார்கள் சமாதி என்று பார்க்கவில்லை!வணக்குவது அல்லாஹ்வைத்தான் சமாதியை அல்ல!

    Reply : 0       0

    Faiz Thursday, 15 September 2011 09:42 PM

    இங்கு பள்ளி இருந்ததா ? இல்லையா ? சியாரம் மாத்திரம் இருந்தால் நல்ல விடயம், ஆனால் நிலத்தில் அவர்கள் உரிமை எடுக்க முடியாது அலவி மௌலான சியாரம் என்பதால் அக்கறை காட்டுகிறார். ரவ்ப் ஹக்கீம் என்ன சொல்கிறார்?

    Reply : 0       0

    sadath Thursday, 15 September 2011 09:58 PM

    markwilson, கப்ரு வணக்கம் இஸ்லாத்தில் இல்லை என்று தான் நான் சொன்னேனே தவிர இருக்கு என்று சொல்லவில்லை! பொதுவாக வாஹபிகள் விளங்கி கொள்ளவது இல்லை. சமாதியில் செய்வது வணக்கம் அல்ல "மரியாதையை" மட்டுமே தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்! அரை குறையாக இஸ்லாத்தை புரிந்து கொண்டு இணையத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை மாசு படுத்தார்தீர்கள். அல்குரான் தௌஹீத் ஜமாஅத் வஹாபிகளின் சொத்தல்ல பகுத்தறிவை கொண்டு சிந்திக்கும் எவர்க்கும் உரித்துடயதே! முஸ்லிம்களாக சிந்திக்க வேண்டிய நேரத்தில் பேரினவாதிகளுக்கு சம்பல் வைக்காதிங்க!

    Reply : 0       0

    Mohamed Janan Friday, 16 September 2011 12:13 AM

    அஹ்மத் தயவு செய்து இஸ்லாத்தை பற்றி விளங்கி கொண்டு கொமென்ட் அடிங்க . . . . சியாரம் என்பது இஸ்லாத்தில் இல்லை . . . . மொதல்ல கலிமா சொல்லி இஸ்லாத்துக்கு வாங்க. . . . . அல்லது பெயர் மாத்துங்க . . . .

    Reply : 0       0

    Hari Friday, 16 September 2011 01:11 AM

    ஏதோ நடக்க எதற்கோ சண்டைபிடிக்கிறது இந்த சமூகம். உங்கள் கருத்து வேறுபாடுகள் இருக்கட்டும். தெகிவளையில் பள்ளியை மூடினார்கள், அடையாள அட்டை விடயத்தில் கைவைத்தார்கள், சென்ற முறை உள்ஹிய்யா விடயத்தில் சில இடத்தில் உயிர்களை காப்பாற்ற முற்பட்டார்கள்இ நேற்று ஹிந்துக்களின் கோயிலில் புகுந்து அடாவடித்தனம் செய்திருக்கிறார்கள் எதோ ஒருவகையில் முஸ்லீம்களை சீண்டி இருக்கிறார்கள். அப்படி தொடர்தால் எப்படி முடியும் என்று யோசிக்காமல் சமுக இணக்கப்பாடு இல்லாதவர்கள் போல் என் கதைக்கிறாக்கள் என விளங்கவில்ல.

    Reply : 0       0

    rakkish Thursday, 15 September 2011 07:34 PM

    நல்லது தான் நடந்தது நண்பர்களே... ஆனால் அவர்களது நோக்கம் வேறு.. அந்த இடத்தில் மஸ்ஜித் இருந்தால் கூட இதுதான் நடந்திருக்கும்.. சிந்திக்கதான் வேண்டும்..

    Reply : 0       0

    ibnuaboo Friday, 16 September 2011 03:54 AM

    சியாரம் என்பதை நுனிப்புல் மேய்ந்து இஸ்லாம் கற்ற வஹ்ஹாபிச சிந்தனைவாதிகளே கப்ரு வணக்கம் என வாதிடுவர். அதில் தவறு இல்லை. ஏனென்றால் இஸ்லாமிய அறிவுக்கும் இஸ்லாமிய ஆத்மஜான அறிவுக்கும் வித்யாசம் தெரியாதவர்கள் தான் இவர்கள். எவரும் அல்லாவின் நல்லடியார்களை அல்லா என்று வணங்குவதில்லை. யாரும் தவறாக ஒரு அவ்ளியாவிடம் uthavi கேட்டால் அடங்கப்பட்டிருக்கும் அவ்லியாவின் அந்தஸ்தையோ அல்லது அந்த சியாரதயோ கேளியாக்கதேவயில்லை. அல்லாவே அவ்லியாக்களை பொறுப்பேற்றுள்ளான் இவர்கள் எல்லாம் அந்தரங்க ந்ஜான குருடர்கள் .கல்பால்..

    Reply : 0       0

    DilR Friday, 16 September 2011 04:35 PM

    விடுங்க சார், அந்த சியாரத்துக்கே அதை காப்பாற்றிக்க முடியல.. போங்க சார் :-)
    அடுத்தது, தம்பிங்களா.. மரியாத அளவு கடந்தா வணக்கமா மாறிடும்க..
    (அதுலயும் சொல்லுங்க பாப்போம் மரியாத இல்லா வணக்கம் ஒன்ற..?)..
    -அப்போ ஏன் பா, ரசூலுல்லாஹ் தான் நடந்து வரும் போது மரியாதைக்காக எழுந்து நிற்க கூட வேணாம் என்று கூறியது ?? ..
    -& ஏன் மற்ற நாட்டு மன்னர்களிடம் மக்கள் மண்டியிடுவது போல் செய்வதை / கையை முத்தமிடுவதை தடுத்தது ..??
    - (ஏன் அவற்றிற்கு தகுதியில் அவரை விட சிறந்த அவுலியா யார் ..?)..

    Reply : 0       0

    xlntgson Friday, 16 September 2011 09:33 PM

    waliதனக்காக சிபாரிசு செய்ய யாரும் தேவை இல்லை என்று கூறும் அல்லாஹ் அவனே தான் நாடியவர்களுக்கு அந்த சிபாரிசு செய்யும் அதிகாரம் இருப்பதாக கூறுகின்றானே அதன் விளக்கம் தான் என்ன?அலியன் வலியல்லாஹ் என்ற நபிமொழிக்கு வியாக்கியானம் தான் என்னவோ?

    Reply : 0       0

    ஹில்முஸாத் Friday, 16 September 2011 10:36 PM

    போதாக் குறைக்கு இங்கையும் தர்க்கம் பண்ணவாம்... நான் ஒண்டு கேட்கிறேன்... கோவிக்கப்படாது. யாரும் நல்லத யார் வேணுமெண்டாலும் செய்யலாம் என்றா... சீதனம் வாங்காம திருமணம் முடிக்க சிங்களவர் ரெடியெண்டா உங்க பெண்களை கொடுக்க தயாரா??? லங்கன்... இஸ்ஹாக்...ஜனான்.... டிஐஆர்...

    Reply : 0       0

    Hari Friday, 16 September 2011 11:33 PM

    இந்த விவாதத்தை முடித்துவிடலாம். தொடர்து திறந்து வைத்துக்கொண்டு மார்க்க விடயத்தை வேடிக்கயாக்கத் தேவையில்லை.

    Reply : 0       0

    xlntgson Saturday, 17 September 2011 09:34 PM

    Hari விவாதத்தை முடிவில்லாமல் கொண்டு போக விருப்பம் இல்லை. உங்கள் எச்சரிக்கைகள் புதிதாக யாரேனும் கப்ரைக் கட்ட முயன்றால் தான் ஏற்கனவே இருப்பவற்றை உடைக்க அதிகாரம் இல்லை. இடப்பிரச்சினை அந்தக் காலத்தில் இல்லை. காடுகளாக இருந்த காலத்தில் யாரும் அதில் அத்துமீறி குடியேறாதிருக்க கட்டப்பட்டவை ருக்மணிதேவி கல்லறையை நீர்கொழும்பில் அளித்தவர்களுக்கு நீதிமன்று நஷ்டஈடு கொடுக்க உத்தரவு செய்தது. புதை பொருள் ஆராய்ச்சியோ? மண்ணறையில் நடப்பது என்ன என்று ஆராயவோ? புதையல் தேடும் ஆட்களும் புதைகுழிகளைத் தோண்டுகின்றனர் என்று கேள்வி.

    Reply : 0       0

    xlntgson Sunday, 18 September 2011 09:34 PM

    நபியின் கப்ரைக் கட்டலாம் என்பதும் இல்லை எத்தனையோ நபிமாருக்கு கப்ரு இல்லை. ஒரு நபிக்கு இரண்டு மூன்று இடத்தில் கப்ரு இருக்கிறது. சுனாமி பூகம்பம் பிரளயம் பெருவெள்ளம் என்று இடங்களின் அமைப்பு மாறிக்கொண்டே இருக்கும். கப்ரு கட்டுவதை பெரிதாக்கி ஒருவரை ஒருவர் கொலை செய்வதென்றால் அமெரிக்கர்களுக்குத் தான் கொண்டாட்டம் கடலில் வீசிவிடுவார்கள். பொது இடங்களில் ஆணை ஆண், பெண்ணைப் பெண் பகிரங்கமாக முத்தமிடலாம். ஆனால் பகிரங்கமாக தொழ இயலாதாம். புதிய சட்டம் பிரான்சில் இயற்றப்போகின்றனர் முஸ்லிம்களை குறிவைத்து, இதே மனித உரிமை?

    Reply : 0       0

    முசம்மில் Wednesday, 21 September 2011 02:49 AM

    மடத்தனமா சிலர் காமன்ட் பண்ணி இருக்கிறாங்க. கபூர் உடைப்பதா இல்லையா என்பதல்ல இங்கு பிரச்சனை. முஸ்லிம்களின் உரிமையில் கை வைத்துள்ளது தான் பிரச்சனை. பிரச்சனையை விளங்குங்கள் சகோதரர்களே.

    Reply : 0       0

    lankan Thursday, 15 September 2011 04:02 PM

    முதலில் நாம நம்ம தலிவர்கள் எல்லாம் முஸ்லிம்களா என்று டெஸ்ட் பண்ண வேண்டும் முனாபிக் எல்லாம் இஸ்லாமிய தலிவர்களா இருகாங்க அல்லாஹ் தான் இவங்களுக்கு நல்ல பாடம் கட்பிகனும்.

    Reply : 0       0

    lankan1st Thursday, 15 September 2011 04:23 AM

    ஜேவிபி எப்ப குருஆனை பார்த்தார்கள்?

    Reply : 0       0

    ruban Thursday, 15 September 2011 04:38 AM

    நீங்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள் தானே ?

    Reply : 0       0

    Mohamed Janan Thursday, 15 September 2011 04:54 AM

    நல்லது நடந்துருக்குது அது யார் செய்தaல் என்ன ?

    Reply : 0       0

    ishaq Thursday, 15 September 2011 06:33 AM

    நல்ல விடயங்களை யார் வேண்டுமானாலும் செய்யலாம் மௌலானா...

    Reply : 0       0

    acord4 Thursday, 15 September 2011 10:57 AM

    நல்லது நடந்தது

    Reply : 0       0

    Ashashi Thursday, 15 September 2011 01:44 PM

    முஸ்லிம்கள் செய்ய வேண்டியதை அவர்கள் செய்து விட்டார்கள்.

    Reply : 0       0

    sadath Thursday, 15 September 2011 02:01 PM

    இது நல்லதா? வணக்கத்துக்கும் மரியாதைக்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறுகிறது தொஹீத் ஜமாஅத், அந்த சியாரம் மீண்டும் கட்ட வேண்டும், இந்த செயல் இஸ்லாமிய விழுமியங்களுக்கு முரணானது.

    Reply : 0       0

    bis Thursday, 15 September 2011 02:08 PM

    அவர்களுக்கும் உண்மை விளங்கிடுச்சா?

    Reply : 0       0

    lankan Thursday, 15 September 2011 02:21 AM

    என்னப்பா ஜேவிபி தொஹீத் ஜமாஅத் ஆக மாறீட்டாங்களா ?

    Reply : 0       0

    Islam Thursday, 15 September 2011 04:28 PM

    அலவியும் அரசியலும் >>>>>>>>>>>>

    Reply : 0       0

    easternguy Thursday, 15 September 2011 04:40 PM

    செத்த பிணம் ஒன்றை அடக்கி அந்த இடத்தில் கல்லால் கட்டி அதை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம் உங்கள் கூட்டம்.. அதை உண்மையான முஸ்லிம்கள் உடைக்க வேண்டும்.. அதை இப்போது யாரோ செய்துள்ளனர். ... சந்தொசப்படுவையா........ அத உட்டுட்டு...... புலம்புறே....... இறைவன் நேர்வழி எல்லோருக்கும் காட்டட்டும்..

    Reply : 0       0

    MMohamed Thursday, 15 September 2011 04:49 PM

    தம்பி ரூபன் நீங்க யாரை சொல்றங்க? முதலில் சேதியை நன்கு விளங்குங்கள். அதன் பின் கருத்து கூறுங்கள் இஸ்லாத்தில் சமாதி என்பது கிடையாது எனவே இது ஒரு விடயமே இல்ல. இதை அரசியலுக்கு சாதகப்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்.
    இதை விட எவ்வளவோ தலை போற சம்பவங்கள் நடக்குது (மர்ம மனிதன்) அதுகள் ஒன்றும் இவர்கள் கணங்களுக்கு விளங்காது
    எல்லாம் அவரவர் கதிரைகளை காத்துக் கொள்ளத்தான்

    Reply : 0       0

    Ahmed Thursday, 15 September 2011 05:19 PM

    முஹம்மத் ஜனன அவர்களே நாளை ஒரு பள்ளி வாசலை இடிச்சி போட்டாலும் இப்பிடியா வெகுளித் தனமா கமெண்ட் அடிப்பீங்கோ???

    Reply : 0       0

    sahotharan Thursday, 15 September 2011 05:35 PM

    முஸ்லிம்கள் செய்ய வேண்டியதை இவர்கள் செய்கிறார்கள் . விளக்கம் தெரியாமல் செய்கிறார்கள் . இவர்கள் அதை பள்ளிவாசல் என்று நினைத்து விட்டார்கள். இதுவும் இனவாதத்தின் வெளிப்பாடுதான். இதை முஸ்லிம்கள் செய்து வேறு திட்டங்களுக்கு பயன் படுத்தி இருந்தால் முன்மாதிரியாக இருந்திருக்கும்.

    Reply : 0       0

    Rizadh SMT Thursday, 15 September 2011 05:59 PM

    "மாசா அல்லாஹ் " நல்ல விஷயம் .. இனியாவது திருந்துவார்களா ? முஸ்லிம்கள் என்ற பெயரில் உள்ள கப்ரு வணங்கிகள்.. ? இதனை செய்தவர்களுக்கு நன்றி ... ! ! !

    Reply : 0       0

    Mark Wilson Thursday, 15 September 2011 06:58 PM

    இஸ்லாத்துக்கு நல்லதே...... கப்ரு வணக்கத்துக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை....

    Reply : 0       0

    Muslim Thursday, 15 September 2011 07:09 PM

    அல்லாஹு அக்பர் ........ இறைவன் சொன்ன மாதிரி அந்நியனை கொண்டு அழித்து இருக்கான் முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இல்லாவிடின் இப்படித்தான் நடக்கும் அல்லஹ் அக்பர் ..........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X