Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் பிரதேசத்தில் முஸ்லிம் ஸியாரம் (சமாதி) உடைக்கப்பட்டதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அநுராதபுரம் பிரதேசத்தில் முஸ்லிம் ஸியாரம் உடைக்கப்பட்டதன் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டதாக மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலான நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்புகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த சமாதி உடைக்கப்பட்ட போது பொலிஸ் உயர் அதிகாரிகளும் உடன் இருந்துள்ளனர். இதனால் இந்த ஸியாரம் உடைப்பிற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். இதனை விடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் மீது குற்றஞ்சாட்டுவது தவறாகும்.
யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் இலங்கையில் மதங்களுக்கிடையிலான உறவை கட்டியொழுப்பும் நடவடிக்கையில் மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் முஸ்லிம் ஸியாரத்தினை உடைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டிய எந்த தேவையும் இல்லை.
மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக அரசாங்கம் இவ்வாறான பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்தி:
ஸியாரம் உடைப்பின் பின்னணியில் ஜே.வி.பி: அலவி மௌலான குற்றச்சாட்டு
ramzeen Friday, 16 September 2011 06:13 PM
இங்கு கருத்து புலம்பல் நடக்குது. வீணான கருத்து வேண்டாம். உடைத்தது தவறா? உடைத்தவர்கள் தவறா? சிந்திப்போம். இது போன்ற ஒண்டு இனி நடக்காமல் இருக்க, என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள் pls.
Reply : 0 0
IBNU ABOO Tuesday, 20 September 2011 04:19 AM
சொல்லிதெரிவதல்ல இந்த கலையும். இப்னு அபூ என்பதற்கு அர்த்தம் எங்களுக்கு தெரியாமல் தான் சகினா எதோ கண்டுபிடித்த மாதிரி பண்டிததனமாய் கூறியுள்ளார். என்பெயரில் உள்ள வெளி அர்த்தம் அவட அறிவு டிகிரிக்கு அவ்வளவுதான் விளங்கும் . என்பெயரில் புதைந்துள்ள சூட்சும அர்த்தம் எனக்கு மட்டும் தான் வெளிச்சம். ஹம்சா இப்போது என் கலை விளங்குதா .சாரி அருவய்க்கு .
Reply : 0 0
hamza Monday, 19 September 2011 01:10 AM
சியாரம் உடைத்ததை விட சகீனாவை உடைத்ததுதான் பெரிய விடயம்போல விளங்குது, இந்தக் கலையை எங்களுக்கும் சொல்லி தாங்களேன் இப்னு அபூ.....
Reply : 0 0
sadath Saturday, 17 September 2011 02:06 PM
ரக்கிஷ், நேர்வழி பெற்றவர்கள் என்று ரசூலுடைய வாயால் கூறப்பட்ட அசரதுள் முபச்ஷிரீன் ஒரு சிலரின் சியாரங்களும் சவுதியில் நூறு வருடங்களுக்கு முன்னால் தௌஹீத் ஜமாத் எனப்படும் வஹாபிகளால் உடைக்கபட்டது? சியாரத் கட்டப்பட்ட நிலையில் தான் ரசூலுடைய சியரத்தும் இப்பவும் உள்ளது இல்லையென்றல் வஹாபி இஸ்லாதை பின்பற்றும் சவுதி அரசிடம் ரசூலுடைய மக்ரபாவை ஒரு போட்டோ பிடித்து காட்டசொல்லுங்க, இந்த உலகமே அறிந்துகொள்வதற்கு லேசாக இருக்கும்!அல்குரான் அல்ஹடீஸ் நீங்களும் படிங்க! கொடி ஏற்றுவது கூடும்/கூடாது எங்கு சொல்லப்பட்டுள்ளது.
Reply : 0 0
Dilshad Muhammed Saturday, 17 September 2011 04:52 AM
அவ்லியாக்கள் மட்டுமல்ல யார் மரணித்தாலும் விரும்பினால் அவர்களது சொந்த காணிகளில் அடக்கம் செய்யலாம் அல்லாவிட்டால் பொது மய்யவாடிகளில் தான் அடக்கம் செய்யப்படவேண்டும். இது தான் இஸ்லாமிய சட்டம். இவரென்ன நபியா இறந்த இடத்தில் அடக்கம் செய்வதற்கு. இதிலும் அரசியல் செய்யப் பார்க்கிறார்கள்.
Reply : 0 0
ibnuaboo Saturday, 17 September 2011 04:34 AM
சகீனா உங்கள் கமெண்ட்ஸ் எல்லாம் வாசித்துக்கொண்டுதான் வருகிறேன் . அதற்கு பெயர்தான் உளறல். சியாரம் உடைப்பு விசயத்தை விட்டு என் பேரை மாற்ற சொல்கிறீர்களே . எனக்கு பதில் அளிக்க முடியாத ஆற்றாமையின் எரிச்சல் . ஒரு நல்ல பெயர் சொல்லுங்களேன் பார்போம் .
Reply : 0 0
Whistle Blower Saturday, 17 September 2011 02:17 AM
சம்திங் வில் ஹப்பன்.
Reply : 0 0
ஹில்முஸாத் Friday, 16 September 2011 10:30 PM
அவுலியா என்ற பெயரில் சொந்தப் பெயரைப் போட்டு கொமன்டஸ் அடிக்கத்தெரியாத அரைவேக்காடுகளெல்லாம் மார்க்கம் கதைக்குதுகள்.... பேரினவாதிகள் உங்கள் உள்ளூட்டுக்குள் வரும் வரை இவ்வாறே கொள்கை வளர்த்துக்கொண்டேயிருங்கள்... சகீனா உங்களுக்கும் சேர்த்துத்தான்....
றம்ஸீன், உடைக்கும் கன்ரக்ட் எடுத்திருக்கிறீர்களா? உடைக்க...
Reply : 0 0
ramzeen Friday, 16 September 2011 06:24 PM
இதை உடைத்த சகோதரர்களே உங்களுடைய மத நம்பிக்கை சார்ந்த ஏதாவது ஒன்றில் வேறு ஒரு நபர் கை வைத்தால் உங்களுடய உணர்வுகள் என்ன சொல்லும். அதுபோலத்தான் இதுவும் ஆனால் அது உடைக்க வேண்டியது என்றால் நாங்களே உடைக்கிறோம். pls
Reply : 0 0
sakeena. Friday, 16 September 2011 12:32 AM
பிஷ்ஷு
Reply : 0 0
rakkish. Friday, 16 September 2011 05:08 PM
உடைத்தவர்களும், அதன் காரணமும் தவறு.. சதாத், நேர்வழி பெற்றவர்கள் என்று நீங்களாக யாரையும் எடுத்துக்கொள்ள முடியாது.. அதை அறிந்தவன் ஒருவன்.. அப்படியென்றால் நபி(ஸல்) காலத்தில் நேர் வழி நடந்தவர்கள் யாரும் இருக்கவில்லை போலும்.. அவர்கள் யாருக்கும் கோடி ஏற்றி கொண்டாடியதாக எங்கும் காணவில்லையே.. உங்களை நபி(ஸல்) முஸ்லிம் நாடுகளை பின்பற்றுங்கள் என்று சொல்லவில்லை... அவர்களது இறுதி உரையில் குர்-ஆன்,ஹதீஸ் இரண்டை தான் பின்பற்ற சொன்னார்கள்..தெளிவான மார்கத்தில் குழப்பத்தை உண்டு பண்ணாதீர்கள்..
Reply : 0 0
salma Friday, 16 September 2011 02:44 PM
நல்லம் sakeena.
Reply : 0 0
sadath Friday, 16 September 2011 02:18 PM
சிராஜ். அரபு மொழியில் சியாரத் என்றல் சந்திப்பது என்று பொருள்! உயிருடன் உள்ளவர்கும் மரணித்தவர்கும் சந்திப்பதை அரபியில் சியரா என்பார்கள்! வணக்கம் செய்தால் வழிபாடு வரும், இங்கு நடப்பது மரியாதையை, வணக்கம் கிடையாது. ஆக்குபவனும் அழிப்பவனும் ரப்பு தான் அவ்லியா கிடையாது. அல்லாஹ்வைத்தான் வணகுகின்றோம், நேர்வலி பெற்ற நல அடியார்களை பின்தொடர்கின்றோம். முடியுமானால் அரபு மொழி பேசி அல்குரானை விளங்குகின்ற ஈராக், எமன், ஜோர்டான் பக்கம் தௌஹீத் ஜமாஅத் சென்று சியாரம் உடையுங்கள், டைம் வேஸ்ட் பண்ணாதிங்க சாமி!
Reply : 0 0
awliya Friday, 16 September 2011 10:02 AM
இப்னு அபு. நீங்களெல்லாம் படுக்க வைத்து வணங்கும் கூட்டமா? j v p விற்கு விளங்கின இஸ்லாம் கூட ஒங்களுக்கு விளங்குது இல்லே.....
Reply : 0 0
siraj Friday, 16 September 2011 05:35 AM
இது யார் உடைத்தார்கள் என்பதனை பாருங்கள். ஏன்னா சியாரம் வழிபாடு இஸ்லாத்தில் இல்லை. எனவே தவ்ஹீத் ஏகத்துவ வாதிகள் உடைத்திருந்தால் குட்வேர்க்.ஆனால் மற்றவர்கள் ஏன் உடைக்கனும்? காரணம் என்ன?
Reply : 0 0
sakeena. Friday, 16 September 2011 04:24 AM
மகனுடைய வாப்பா...[இப்னு அபு] என்ன உளர்றீங்க!முதல்ல உங்க பெயர மாத்துங்க.
Reply : 0 0
IBNU ABOO Friday, 16 September 2011 04:07 AM
யார் ? உடைத்தவர்களும் அதன் ஆதரவாளர்களும் தானே . நல்ல தீர்ப்பு , சபாஸ் சகீனா .
Reply : 0 0
IBNU ABOO Friday, 16 September 2011 03:08 AM
உண்மையான சியாரத்தில் அல்லாவின் நல்லடியார்கள் மரணம் என்னும் தூக்கத்தில் தான் இருப்பார்கள். அவர்களை இறந்தவர்கள் எனக்கருத வேண்டாம். அவர்கள் அல்லாவின் ஊட்டலில் கிடப்பவர்கள். இந்த சியாரம் அவ்வாறான அந்தஸ்தில் இருந்தால் இதில் கை வைத்தவர்கள் அதன் பலனை வெகு சீக்கிரம் கண்டுகொள்வார்கள். அல்லா சொல்கிறான் எனது நல்லடியார்கள் என் போர்வைக்குள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சம்பவம் அக்கரைப்பற்றில் ஒரு காலத்தில் நடந்து சம்பந்தப்பட்ட அரசியல்வாதி ஒருவர் விபத்தில் சிக்கி படு மோசமாக செத்தார் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
8 hours ago
8 hours ago