Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில், பிரதான சுற்றுலா பகுதியில் 165 ஏக்கர் நிலத்தை அரசியல் செல்வாக்குள்ள தனி நபர்கள் அபகரித்துள்ளதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் அப்பகுதி குடியிருப்பாளர்களும் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியிலுள்ள 444 ஏக்கர் பரப்பளவிலான அரசாங்க காணியில் 165 ஏக்கரை, பிரதியமைச்சர் ஒருவரின் ஆதரவுடன் சிலர் கைப்பற்றியுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அத்துடன் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் பரப்பளவிலான காணியும் அந்நபர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி நபர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு ஏக்கர் தலா 3 மில்லியன் ரூபா வீதம் இக்காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இவ்விடயத்தை அண்மையில் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்தார்.
அப்போது காணியமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் பதிலளிக்கையில், இத்தகைய நடவடிக்கை தொடர தான் அனுமதிக்கப் போவதில்லை எனவும் சம்பந்தப்பட்டவர்களின் அந்தஸ்து எத்தகையதாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியமை குறிப்பிடத்தக்கது.
தற்போது சம்பந்தப்பட்ட நபர்களுக்க எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலகத்திற்கு காணி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு காணி அமைச்சுக்கு அதிகாரமில்லை எனவும் இது குறித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆலங்குடா பிரதேச செயலகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சின் உயர் அதிகாரியொருவர் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை என பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார்.
தனியார் காணியொன்றின் உரிமையாளரான ஷம்மி சில்வா என்பவர் கூறுகையில், வங்கியொன்று ஏல விற்பனை செய்தபோது ஒரு காணியை 5.8 மில்லியன் ரூபாவுக்கு தான் வாங்கியதாகவும் எனினும் அக்காணியை தான் பெறுப்பேற்க சென்றபோது அதை அரசியல் ஆதரவுள்ள சிலர் கைப்பற்றியிருந்ததாகவும் தெரிவித்தார். தனது காணி வெளிநாட்டவர்கள் 6 பேருக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
IFHAM Saturday, 17 September 2011 07:29 PM
ஏழைகளுடைய வயிற்றில் அடிக்காதிங்கப்பா. அவங்க பாவம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
8 hours ago
8 hours ago