Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.எம். தாரிக்)
அநுராதபுரத்தில் இன்று அதிகாலை லொறியொன்றின் மீது ரயில் மோதியதால் லொறியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கே.வள்ளிபுரம் (64) என்பவரே உயிரிழந்ததாக அநுராதரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரஜரட்டன ரெஜின எனும் ரயில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற லொறியுடன் மோதியுள்ளது.
மேற்படி லொறியானது பாதுகாப்புக் கடவையை மீறி ரயில்பாதையை கடக்க முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அநுராதரபுரம் மதவாச்சி வீதியிலுள்ள ஹதரஸ்கல்ல எனும் இடத்தில் இவ்விபத்து இடம்பெற்றது. லொறியின் உதவியாளர் லொறியிலிருந்து பாய்ந்து காயமடைந்த நிலையில் அநுராதரபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குருநாகல் அளவ்வயில் நேற்று சனிக்கிழமை 3 ரயில்கள் மோதிக்கொண்டதால் ஐவர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
8 hours ago
8 hours ago