Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 18 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுராதபுரம் பிரதேசத்தில் உடைக்கப்பட்ட சியாரத்தை மீண்டும் உரிய இடத்தில் அமைத்து தருவதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையிலான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகளுக்கும் என்.எம்.அமீன் தலைமையிலான முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா பிரதிநிதிகளுக்கும் இடையில் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஏற்பாட்டிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது பாதுகாப்பு செயலாளர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
அநுராதபுரம் – குருணாகல் வீதியிலுள்ள அநுராதபுரம் பழைய நகரத்தில் அமைந்திருந்த மிக பழமை வாய்ந்த முஸ்லிம் ஸியாரம் கடந்த வாரம் உடைக்கப்பட்டது.
பௌத்த பிக்குகள் அணியும் காவி நிற உடையுடனான சிலரின் பங்குபற்றலுடனே இந்த சியாரம் உடைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புபட்ட செய்திகள்:
'ஸியாரம் உடைக்கப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்'
ஸியாரம் உடைப்பின் பின்னணியில் ஜே.வி.பி: அலவி மௌலான குற்றச்சாட்டு
simufeen Tuesday, 20 September 2011 04:31 AM
சியாரம் என்பது ( வணங்கப்பட்டால் ) உடைக்கப்பட வேன்டியது தான் அதை சரியாக பார்த்தால் நாங்கள் முஸ்லிங்கள் உடைக்கவேண்டும் ஆனால் பேரினவாதிகள் செய்தது மிகவும் வெறுக்கத்தக்க செயலாகும்.
Reply : 0 0
sadath Monday, 19 September 2011 10:54 PM
In the holy city of Madina where our beloved prophet lives His tomb also build but mr. ksa Wahabi faction who run the state curb us from seeing it, if not let them officially open that quarter and show us whets inside which is called Rawla shereef…then about Ulama meet Ahle sunna wal jama not other who always mislead you…. religious verdict is that siyara can be built bcz its not against Islam hence, such doing is not association of Allah…..we honor those buried not pray…..
Reply : 0 0
Hari Monday, 19 September 2011 11:53 PM
அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்ற போலீஸ்காரர்கள் இப்போ என்ன சொகிறார்கள்? உடைத்தவர்களை பற்றி போலீஸில் முறைப்பாடு செய்து பார்த்திருந்த போலீசாரையும் சேர்த்து சாக்கியாக போட்டு வசக்கு தொடர வேண்டும். எப்படி இதை முன்னெடுக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
Reply : 0 0
roomy Monday, 19 September 2011 11:56 PM
வாஹாபிகளே....நீங்க அல்லாஹுக்கு உருவம் இருக்கு ஏன்று சொல்லி இணை வைப்பதை விட்டு உங்களை யார் பாதுகாப்பது.....வாஹாபிகளே நீங்கள் தலீபான்களின் ஏன்ஜெண்டுகள்?
Reply : 0 0
rozan Tuesday, 20 September 2011 12:00 AM
சியாரம் ஏன்பது ஒரு தரிசனம்.... மாறாக விளங்கி கருத்து சொல்வது....... நீங்கள் இஸ்லாத்துக்கு ஏதிராக அதை உடைத்தவர்களுடைய செயற்பாட்டுக்கு ஆதரவு செய்வது ஆகும்.....வஹாபிகள் இஸ்லாத்தின் விரோதிகளின் பங்காளிகள் தான் என்பதை நிருபித்திருகிரார்கள்........
Reply : 0 0
Doc - KSA Tuesday, 20 September 2011 12:41 AM
All our brothers are expressing their opinions and some are going away from the main subject which is Does Islam allow "Siyaram" (specially in/around the mosques)? Can any intellectual show or proof from Quraan or Hadeeth? We all know that "siyaram" is not allowed in/around mosque but we don't know how to proof it. Islam is a peaceful religion, therefore, please avoid criticize anyone or any organization.
Reply : 0 0
Marzook, UK Tuesday, 20 September 2011 01:25 AM
பிரச்சனையில்ல. இது முஸ்லிம்களை புண் படுத்துவதற்காக சிலரினால் செய்யப்பட்ட ஒன்று. முஸ்லிம்களின் உரிமை பிரச்சினை. இதை அவ்விதத்தில் நோக்காமல் வேறு விதத்தில் நோக்குவது எங்கள் சமூகத்தை நாங்களே காட்டிகொடுக்கும் நிலையாகிவிடும். இதை உரிமை பிரச்சினை என்று குரல் எழுப்புவோம் மற்ற வேறுபாடுகளை மறந்து.
Reply : 0 0
niz Tuesday, 20 September 2011 01:33 AM
சியாரம் உரிய இடத்தில் கட்டாயம் கட்டப்பட வேண்டும்.... சியரத்தில் யாரும் வணங்குவதில்லை, மரியாதையே செய்யப்படுகிறது, சியாரத் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு.
இஸ்லாத்தை அரை குறைவாக விளங்கிய வஹாபிகள் பேரினவாதிகளின் செயலை ஆதரிக்கிறார்கள்.....
Reply : 0 0
sa Tuesday, 20 September 2011 01:57 AM
siyaram udaithavarhal allahvin naladiyarhal. Udaithavarukku oru o podu.
Reply : 0 0
sadath Tuesday, 20 September 2011 02:14 AM
Mr. Doc what u say then about Our beloved Prophet Siyara in Holy Madina which is inside the mosque, don’t u this simple truth! In Sri Lanka siyara came and people come to visit it, then mosque gets established to carry out five time prayers and other religious activities. In some cases small Muslim town emerged by that result. People not buried those “lovers of Allah” (Awliya) after building a mosque! There is a clear boundary wall between siyara and mosque in all mosques that harbor siyara, never a mosque has a siyara right middle of the mosque, which is against Islamic law…. it will be either in a corner or within a boundary wall erected to separate siyara and mosque…. people never pray Awliya its un-Islamic but honor them for because He was Lover of Al.
Reply : 0 0
buharyrafi Tuesday, 20 September 2011 03:19 AM
முஸ்லிம்கள் இலங்கையில் 1500 வருடங்களுக்கு முன்னதாக வாழ்ந்ததற்கு ஆதாரம் உண்டு ஸியாரம்களை அழிப்பதால் நமுஸ்லிம்கள் இலங்கையில் 1500 வருடங்களுக்கு முன்னதாக வாழ்ந்ததற்கு ஆதாரம் உண்டு ஸியாரம்களை அழிப்பதால் நமது பிள்ளைகளுக்கும் நம்மைப் போன்று இது சிங்கள நாடு என்று
அவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறோம்.
Reply : 0 0
aj Tuesday, 20 September 2011 04:12 AM
அநுராதபுரத்தில் பௌத்த பிக்குகளால் இடிக்கப்பட்ட தர்காவை மீண்டும் கட்டித்தருவதாக நான் வாக்குறுதி அளிக்கவில்லை என இலங்கை பாதுகாப்பு செயலர் விளக்கம் அளித்துள்ளார்.:bbc
Reply : 0 0
ihsan Monday, 19 September 2011 10:51 PM
அதை ஒரு பள்ளிவாசலாக எழுப்பி தந்தால் மிக பொருத்தமாக இருக்கும்.
Reply : 0 0
mohamed akmal Tuesday, 20 September 2011 05:56 AM
sahodararhalea allahwukkaha neengal inda widayatthil muslimgalahiya angal anaiwaraum anniya samudayatthidam kaatti kudukka weandam. ean widanda waadam inda piriwai waithu than siyaratthai udaitharhal allah padu haakkanum nalai sarchaikuriya palli halukku kai waiparhal poadu ungal tarkam nirutthungal. allah padukaappan.
Reply : 0 0
althaf Tuesday, 20 September 2011 07:59 AM
சியாரத்தை முஸ்லிம்கள் வணங்குவது இல்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் சியாரங்களில் மண்டியிடும் கூட்டத்தை இவர்கள் , நாகூர் , அஜ்மேர் , ஏர்வாடி , ஏன் , தேவடகஹா தர்காக்களில் போய் ஒருமுறை பார்த்துவிட்டு வரட்டும் , எந்த அக்கிரமத்தை அளிக்க நபிகள் நாயகம் தங்களுடைய இருபத்தி மூன்று ஆண்டுகள் கஷ்டப்பட்டார்களோ அதை இன்று சர்வ சாதாரணமாக முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். சியாரங்கள் தரைமட்டமாக்கப்பட வேண்டியவைகள் என்பதில் அணு அளவுக்கும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை . ஆயினும் கயவர்கள் உடைத்ததை ஒருகாலமும் அனுமதிக்க முடியாது.
Reply : 0 0
Doc -KSA Tuesday, 20 September 2011 08:10 AM
Our prophet Siyaram in Madina is totally different subject. When Madina Haram was expanding, this issue was raised by many Saudi scholars (plz refer to all SL scholars who were graduated from Madina Islamic University) (alive and passed aw. So don't compare it with SL Siyaram. Gents, again reminder, if you don't know the proper info, plz avoid writing in this page. We must respect all scholars those who were genius in Islam. It doesn't mean that we should build a palace (Siyaram) for them. Think.
Reply : 0 0
Doc -KSA Tuesday, 20 September 2011 08:11 AM
Our prophet Siyaram in Madina is totally different subject. When Madina Haram was expanding, this issue was raised by many Saudi scholars (plz refer to all SL scholars who were graduated from Madina Islamic University) (alive and passed aw. So don't compare it with SL Siyaram. Gents, again reminder, if you don't know the proper info, plz avoid writing in this page. We must respect all scholars those who were genius in Islam. It doesn't mean that we should build a palace (Siyaram) for them. Think
Reply : 0 0
Dr. Javahir Tuesday, 20 September 2011 02:58 PM
சியாரத்தை யார் உடைத்தாலும் வரவேற்போம். பள்ளிகளில் கை வைக்காதீர். சியாரம்களை அப்புறப்படுத்துவோம்!!!!!!! திரும்பவும் கட்டித்தர வேண்டாம்!!!!!!!!!!!!
Reply : 0 0
Dr. Javahir Tuesday, 20 September 2011 03:10 PM
Mr. Sadath does not know the history of Rasoolullah's Siyara. It is not really inside the Mosque. The region of Siyara was well beyond the mosque even during the rulings of FOUR "Kalifas". The mosque was widened by a later ruler, who did a wrong thing. That is why the Siyara has been well defined and well separated from the mosque. Do not comment against the Quran and Hadith. You talking against Islamic basics. Keep it well in mind.
Reply : 0 0
Dr. Javahir Tuesday, 20 September 2011 03:19 PM
அல்குர்-ஆண், ஹதீசுக்கு அப்பால் இஸ்லாம் இல்லை எனும் யதார்த்தத்தை உலகுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் உண்மை முஸ்லிம்களை நீங்கள் எப்படி அழைத்தாலும் எமக்கு ஒன்றும் குறையப்போவதில்லை Niz!! நீங்கள் இஸ்லாத்தை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். அல்குர்-ஆணையும் ஹதீசையும் மாத்திரம் இஸ்லாமிய அடிப்படையாக ஏற்றுக் கொல்லாத வரை முஸ்லிமாக முடியாது.
Reply : 0 0
xlntgson Tuesday, 20 September 2011 09:47 PM
althaf தர்காக்களுக்கு ஹிந்துக்கள் பௌத்தர்கள் வரக்கூடாது என்றில்லை உண்மையில் பள்ளிவாயிலுக்குள் அனுமதிக்க இயலாமலே இந்த இடங்கள் பொது அமைதிக்கு உதவு முகமாக மதச்சார்பின்றி திறந்து விடப்படுகிறது அங்கே விழுந்து வணங்குகிறவர்களை எல்லாம் பிடித்து நீ முஸ்லிமா விழுந்து வணங்கலாமா என்று கேட்டுக்கொண்டு இருக்க இயலாது ஒருவேளை நீங்கள் கணக்கெடுப்பு எடுங்கள்! அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் உங்கள் அறிவுரையை எடுத்து சொல்லுங்கள், ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்டவர்கள் மிகக்கஷ்டப்பட்டு செய்தவற்றை இல்லாமல் செய்யாதீர்.
Reply : 0 0
manas Tuesday, 20 September 2011 10:44 PM
சியாரம் உடைக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஒரு அயோக்கியன் காபிர் உடைத்தத தப்பு ஏனெனில். இன்று சியாரம் நாளை தர்ஹா நாளை மறுநாள் பள்ளிவாசல். இப்படி ஆட்டக்கடித்து மாட்டக் கடிக்கிற வேலையை வைத்தால் செய்தவர்களும் இதே போல் நடக்கும் என்பதை உணர்ந்து கொண்டால் சரி.
Reply : 0 0
ibnuaboo Thursday, 22 September 2011 03:04 AM
இஸ்லாத்தை அதன் அசல் வழியில் முறையாக கற்றுக்கொள்ளாமல், அரபு தெரியாமல் தங்களது செவி ஏறல் இஸ்லாமிய அறிவில் சியாரம் என்றால் என்ன, அது எந்தநோக்கதில் கட்டப்பட்டது என்ற ஆராய்ச்சி அறிவில்லாமல் சும்மா கூப்பாடுபோடுவது கேலிக்கூத்த. முப்திகளும், ulamaakkalum arivaarkal சியாரம் என்றால் என்ன அங்கு அடக்க பட்டுள்ள இறைநேசர்களுக்கு கண்ணியம் காட்டப்படுகிறது என்று. யாரும் அல்லா என்று கப்ரை வணங்குவதில்லை, ஈமான், இஸ்லாம் முறையாக கற்றுக்கொள்ளாத தமிழாலே ஓதப்பழகியவர்கள் இஸ்லாத்தை விளங்கி விட்டார்கள் ஆலிம்களைவிட!
Reply : 0 0
aj Monday, 19 September 2011 05:24 PM
மேவிர்ன் செய்த அடாவடி தனத்துக்கும் இதே போல நீதி கிடைக்குமா? நாங்கள் தமிழர்.
Reply : 0 0
nakkiran Monday, 19 September 2011 05:36 AM
உடைத்தவர்களை கைது செய்ய முடிமா ? அதுதான் முதல் தேவை. கட்டி தருவேன், தொப்பி அணியலாம் எல்லாம் மாநகர தேர்தல் வாக்குறுதி.
Reply : 0 0
althaf Monday, 19 September 2011 06:15 AM
சியாரம் உடைத்தது மத வெறி பிடித்த காடையர்களின் அக்கிரமச்செயல் என்பது மறுக்க முடியாது உண்மை. புண்ணிய பூமியை சுத்தப்படுத்துகிறோம் என்று கூக்குரல் விடுபவர்கள் முதலில் அங்கு உள்ள விபச்சார விடுதிகளை , மதுபான கடை , ஆபாச சினிமா விற்பனை , போன்றவைகளை துடைத்தெறிய திராணி அற்றவர்கள் மத தளங்களை அகற்ற புறப்பட்டுள்ளனர். இஸ்லாத்தில் சமாதி வழிபாடு அறவே கிடையாது மார்கத்தை அறியாதவர்கள் இத்தகைய சியரங்களை வழிபட்டு வருகின்றனர். இஸ்லாமிய கொள்கையை குழிதோண்டி புதைக்கும் சியரா வழிபாட்டை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
Reply : 0 0
roomy Monday, 19 September 2011 08:11 AM
அல்தாப்....இஸ்லாதில யாரும் சியாரத்தினை வணங்கிறது இல்லை....சியரத்தினை தரிசித்து அவங்களுக்காக புனித குரான் ஓதி பிராத்திப்பது....... நீங்கள் இதக்கு வேற பெயர் நாமம் சூடுவது உங்களுடைய விதாண்டாவாதமாகும்....
Reply : 0 0
shuraim Monday, 19 September 2011 09:07 AM
இந்த சியாரத்தை உடைத்தவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட வாழ்வை கொடுக்க வேண்டுகிறோம்.
Reply : 0 0
riyas Monday, 19 September 2011 10:30 AM
அங்கே சியாரம் கட்டாமல் பள்ளியாக மாத்திரம் கட்ட வேண்டும்.
Reply : 0 0
sadath Monday, 19 September 2011 02:07 PM
நன்றிகள் கோடி. சொல்வது போன்று செய்தால் மிகவும் நல்லது. இது நடக்குமா என்பது இன்னமும் சந்தேகமே! மேலும் இதுபோன்றே சம்பவங்கள் நடக்காது இருக்க என்ன நடவடிக்கை? மரியாதையை நிமித்தம் காரணமாக மட்டுமே சியாரத் செய்கின்றோம் தவிர வழிபடுவது இல்லை. அவ்வாறு செய்வதும் கூடாது. வஹாபிகள் இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும், வஹாபிய சிந்தனையின் ஊற்று கண் தான் இன்று ஆப்கனிஸ்தானில் இருக்கும் தலிபான் அமைப்பு, இதை விட்டும் இலங்கை திரு நாட்டை இறைவன் பாதுகாக்கட்டும்! சியாரம் மீண்டும் கட்டபட வேண்டும்!
Reply : 0 0
shafi Monday, 19 September 2011 03:46 PM
சியாரம் என்பது முஸ்லிம்களின் வணக்கஸ்தலம் அல்ல. இது அல்லாஹுவுக்கு இணை வைப்பதாகும் . நபிமார்களை இறைவன் இவ்வுலகிற்குகு அனுப்பியது சியார வழிபாடுஇ சிலை வழிபாடு போன்றவைகளை இல்லாமல் செய்வதற்கு . சியாரத்தை உடைத்தது சரி . ஆனால் அதன் நோக்கம் என்ன?? சியாரமா? முஸ்லிமா?
Reply : 0 0
sadath Monday, 19 September 2011 03:47 PM
சியாரம் கட்டப்பட வேண்டும். சிறுபான்மைகள் சமூகங்களின் அபிலாசைகள் மதிக்கப்பட வேண்டும். முன்னேஸ்வரம் கோவில் பக்தர்களின் மிருக பலி நடத்த அனுமதி வேண்டும். சியாரம் வழிபாடு அல்ல, மரியாதையை மட்டுமே என்பதை புரிந்துகொள்வதோடு இது இஸ்லாத்தில் அனுமதிக்கபட்டதே, இஸ்லாதுக்கு புறம்பானது அல்ல.....
Reply : 0 0
... Monday, 19 September 2011 04:01 PM
சியாரம் உடைப்பது ஆகுமா ஆகாதா என்பதல்ல பிரச்சினை , மாறாக மாற்று மதத்தவரின் வழிபாட்டு இடங்களை நினைத்த படி அவமதிக்க இடமளிக்க முடியாது. இவ்வாறன செயல்கள் சமூகத்தில் பிளவையே ஏற்படுத்தும்.
Reply : 0 0
Eelavan Monday, 19 September 2011 04:15 PM
ஒருவரின் சமய நம்பிக்கையை மதிக்கும் பக்குவம் வேண்டும். ஒருவரின் மனதைப் புண்படுத்தி, அவர்களின் மதத்தை அவமதித்து புனித நகரை உருவாக்குவது, உருவாக்குபவர்களின் புனிதமற்ற தன்மையைக் காட்டுகின்றது. சமயங்கள் நல்லவற்றை போதிக்கின்றன. அழிவை, அடக்குமுறையை, ஆணவத்தை போதிப்பதில்லை. அழிவு, அடக்குமுறை, ஆணவம் என்பன எமது வாழ்வின் ஆயுதமானால் நாம் பின்பற்றுவது சமயம் அல்ல.
Reply : 0 0
easternguy Monday, 19 September 2011 05:09 PM
கப்ருகளுக்கு மேல் கட்டி அதை புனிதமாக கருதி வணங்கும் ஒரு பயங்கர பாவம் இந்த அவ்லியாகளால் செய்யப்படுகிறது.. அதை உடைதெறிவது ஒவ்வொரு முஸ்லிம்கள் மீதும் கடமையே அன்றி , முஸ்லிம் அல்லாதவர்கள் மீது அல்ல.. ஆனால் இது மீண்டும் கட்டப்பட வேண்டும் உலமா சபை தலைவர் கேட்டிருப்பது அவர் உண்மையில் முஸ்லிம்தானா என சிந்திக்க வைக்கிறது...
Reply : 0 0
meenavan Monday, 19 September 2011 05:34 AM
சியாரம் மீள அமைப்பதற்கான உறுதிமொழியை பாதுகாப்பு செயலாளர் வழங்கியமைஇ அரசாங்கம் சியார உடைப்பின் பொறுப்பினை ஏற்றுகொள்கிறதா? சியாரம் உடைப்பினை மேற்கொண்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்ன?
Reply : 0 0
Rizadh SMT Monday, 19 September 2011 06:33 PM
இந்த சியாரத்தை உடைத்தவர்களுக்கு அல்லா நல்லருள் புரிவானாக .. மீண்டும் அது கட்டப்படுவதை தடுப்போமாக .....
Reply : 0 0
nawas Monday, 19 September 2011 06:51 PM
சியார வழிபாடு இஸ்லாத்தில் அல்லா மன்னிக்காத பாவம்.
Reply : 0 0
Doc - KSA Monday, 19 September 2011 07:36 PM
Let us focus on "Siyaram". We would like to obtain ULAMA's opinions about "Siyaram". Does Islam say that each mosque must have "Siyaram"? If anyone says, yes Islam allows, let us have solid evidence or proof from Holy Quraan and Hadeeth which I believe all muslims follow. If no,let us have your proof too to understand. We kindly urge all god fearing Islamic scholars to justyfy their propositions on "Siyaram".
Reply : 0 0
Bala Monday, 19 September 2011 07:53 PM
காமடியப் பார்ரா ......
Reply : 0 0
M.A.A.Rasheed Monday, 19 September 2011 08:06 PM
சியாரம் உடைத்ததில் முஸ்லிம்களுக்கு கவலை இல்லை. ஆனால் முஸ்லிம்களின் உடைமைகளுக்கு சேதம் விளைவிப்பது முறையல்ல.
Reply : 0 0
shafi Monday, 19 September 2011 08:16 PM
யா அல்லாஹ இணை வைபவர்களை மன்னிகமாடாய் என்று உனது திருகுரானில் கூறி இருக்கிறாய் . வழி தவறுபவர்களை நேர்வழி காட்டுவாயாக...
Reply : 0 0
pasha Monday, 19 September 2011 08:34 PM
சிய்ராத் வேண்டாம். பள்ளி மட்டும் கட்டுங்கள்.
Reply : 0 0
sadath Monday, 19 September 2011 09:11 PM
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் வஹாபிகள் முடிச்சி போடுகிறார்கள், முஸ்லிம்கள் வணகுவது இல்லை என்றாலும் விடுவதாக இல்லை. முஸ்லிம்களின் மத விவகாரத்தில் பேரினவாதிகள் கை வைத்திருக்கிறார்கள் ஒற்றுமையாக ஒருமித்து எதிர்க்காமல் உடைத்தவனுக்கு நன்றி சொல்கின்றார்கள், ஒரு சாரார். நாளை ஓர் பள்ளிவாசலை அல்லது கோவிலை உடைப்பர். அது வரை பொறுங்கள்.....ஈரானுக்கு அமெரிக்க குண்டு மலை பொழிந்தால் ஷியா என்பதால் சும்மா இருக்க சொல்வார்கள் இந்த வஹாபிகள் போலும். ... சமாதி வழிபாடு ஒன்று இல்லை. செய்வது மரியாதை மட்டுமே....
Reply : 0 0
Marzook, Uk Monday, 19 September 2011 09:57 PM
திரும்ப கட்டித் தருவது ஒரு பக்கம் இருக்கட்டும். சட்டத்தை மீறியயவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு சட்டமும் ஒரு நீதியும் மற்றவர்களுக்கு ஒரு சட்டமும் நீதியா? இதுதான் இலங்கை. இந்நிலையில் சமாதானத்தை எதிர்பார்க்கமுடியுமா?
Reply : 0 0
xlntgson Monday, 19 September 2011 10:17 PM
முதற்கருத்து அறிவு பூர்வமானது. நீர்கொழும்பில் ருக்மணி தேவியின் சமாதியை உடைத்தவர்கள் மன்னிப்பும் கேட்டு அபராதமும் செலுத்தி இருக்கின்றனர். மேலும் கபுருகளில் அல்லாஹ் அல்லாததுகள் வணங்கப்படுகின்றன என்பது பச்சைப்பொய்யாகும். முஸ்லிம்களில் பிரிவுகள் இல்லை என்றாலும் ஷீயா சொன்னி பிரிவை பெரிது படுத்தினால் தான் முஸ்லிம்கள் அழிவை துரிதப்படுத்தலாம் என்று விரும்பும் அமெ போன்ற வல்லூறுகளின் விருப்பத்தை கப்ரு கட்டுவது கப்ரு வணக்கமே என்று விதண்டாவாதம் செய்யும் அரபுநாடுகளில் பிழைப்புக்காகப் போய் இஸ்லாம் படித்தவர்கள்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
8 hours ago
8 hours ago