2025 மே 26, திங்கட்கிழமை

டெங்கு ஒழிப்பு திட்டத்தில் இளைஞர் படை அணியினர் இணைப்பு

Super User   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

 

அநுராதபுரம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு  திட்டத்தில் இளைஞர் படை அணியினரை சேர்த்துக் கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாக அநுராதபுரம் இளைஞர் படையணியின் நிலைய  பொறுப்பதிகாரி வீ.ஏ.தர்மரத்ன தெரிவித்தார்.

டெங்கு பரவும் இடங்களை அடையாளம் கண்டு குறித்த விடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இளைஞர் படையணியின் இளைஞர் யுவதிகள்  ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அநுராதபுரம் மாவட்டத்தில் செயற்படுத்தப்படவுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் அநுராதபுரம், கலாவௌ (புல்நேவ), கெக்கிராவ, அரலகங்வில ஆகிய இளைஞர் படையணியின் உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இச்செயற்திட்டத்திற்காக 2,250 இளைஞர் யுவதிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனமை குறிப்பிடத்தக்கது
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X