2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முந்தல் பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி பணிகளுக்காக நிதியொதுக்கீடு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்காக மூன்று கோடியே முப்பது லட்சம் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக முந்தல் பிரதேச செயலக அபிவிருத்திப் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 31 கிராம அலுவலர் பிரிவுகளிலும் திவி நெகும வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கே இந்நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

கிராமிய பாதைகள், மின்சாரம் மற்றும் குடி நீர் போன்ற திட்டங்களுக்கு 82 லட்சம் ரூபாவும் சிறு நீர்ப்பாசன திட்டங்களுக்கு 97 லட்சம் ரூபாவும் சுகாதார மருத்து வசிகிச்சை நிலையங்களின் அபிவிருத்திக்கு 65 லட்சம் ரூபாவும் பாடசாலை மலசல கூடங்கள் அமைப்பதற்கு 82 லட்சம் ரூபாவும் பாலர் பாடசாலை அபிவிருத்திற்கு 4 இலட்சம் ரூபா என இந்நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

இந்நிதியின் மூலமான அபிவிருத்தி பணிகள் இவ்வருடத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளதோடு இதற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X