Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 25 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களை அவர்களது தாயகத்தில் மீள்குடியேற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுக்கும் செயற்பாடுகளில் சில அதிகாரிகள் தொடர்ந்தும் ஈடுபடுவதாக கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.
இந்த சவால்களை முறியடிக்க அமைச்சுப் பதவி தடையாக இருக்குமெனில் அதனை தியகாம் செய்துவிட்டு மக்களோடு நின்று போராடி அதனை பெறுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
புத்தளம் வேப்பமடு அர்ரஹ்மா முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இஸ்ஸதீன் றிழ்வான் எழுதிய 'என் மகன் ஒரு லீடர்' என்னும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.எஸ்.முஹம்மத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் பேச்சுகையில் கூறியதாவது:
'வடக்கிலிருந்து பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 21 வருடங்களாகின்றன. கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைதான், எமது மண்ணுக்கு மீண்டும் நாம் சென்று வாழ முடியாத சூழல், ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது. இருந்த போதும் அன்று முஸ்லிம்கள் எவ்வாறு வெளியேற்றப்பட்டார்களோ, அதனை விட மிகவும் பயங்கரமான முறையில் சில அதிகாரிகள் முஸ்லிம்களை இன்று வஞ்சிக்கின்றனர். அது குறித்து ஜனாதிபதிக்கும், அமைச்சரவைக்கும், நாடாளுமன்றத்திலும் தெரிவித்துள்ளேன்.
எந்த சமூகத்துக்கும் அநியாயம் செய்யாத வடமாகாண முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சில சக்திகள் செயற்படுவது அங்கீகரிக்கப்பட முடியாது. வடமாகாண முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் அதற்காக உதவி செய்யுங்கள் என்று நாம் சர்வதேசத்திடம் கேட்டால், அப்படி இடம் பெயர்ந்த மக்கள் இருக்கின்றார்களா என்று தான் கேட்கின்றனர், அந்த அளவுக்கு முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் மழுங்கடிக்கப்பட்டு, மறைக்கப்பட்டுள்ளன.
இது இச்சமூகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கற்றல், மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட சகல துறைகளிலும் ஒரு பாரிய பின்னடைவை கொண்டுள்ளது. இதனை கட்டியெழுப்புவதற்கு பல வருடங்கள் தேவையாகவுள்ளது. எமக்கு மக்கள் தந்துள்ள பதவிகளைக் கொண்டு அம்மக்களது உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்றால் அதனை துக்கி வீசிவிட்டு இடம் பெயர்க்கப்பட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்களையும் ஒன்று திரட்டி போராடி அதனை பெறுவதற்கு தயாராகவுள்ளேன்.
தேர்தல் காலங்களில் வந்து வாக்குகளை கேட்டு அதனை பெற்றுக் கொண்டதன் பின்னர் அம்மக்களை துக்கியெறியும் அரிசியல் தலைமைகளின் செயற்பாடுகளுக்கு இனியும் எமது மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள்.
நாம் சார்ந்திருக்கும் வட மாகாண முஸ்லிம்களது பிரச்சிணைகள் மற்றும் தேவைகள் குறித்து வெளிக் கொண்டுவருவதற்கு தனியான ஊடகங்கள் இல்லை. ஏனைய சமூகம் சார்ந்த பிரச்சினைகளை வெளிக் கொண்டுவருவதில் அவர்கள் சார்ந்த ஊடகங்கள் செயற்பாடுகின்றன. அது அவர்களது சுதந்திரம், அதே போன்று எமது மக்களது அபிலாஷைகளையும், எதிர்பார்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என் கௌரவமாக கேட்கின்றேன். வடக்கு மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் போராட்டத்திற்கு ஊடகங்கள் தமது பங்களிப்பை தர வேண்டும்,
முஸ்லிம்களும் யுத்தத்தால் வெளியேறியவர்கள் அவர்களுக்கும் வீட்டுத் திட்டங்களை கட்டித் தாருங்கள் என்று சில அரச சார்பற்ற நிறுவனங்களிடம் கேட்டால், அதற்கு வேறு காரணங்களை காட்டி அதனை தட்டிக் கழிக்கின்ற நிலையே தற்போது காணப்படுகின்றது. என்னிடம் இன வாதமில்லை. எனது அமைச்சுப் பதவிகளை தமிழ், முஸ்லிம் மக்களது மேம்பாடுகளுக்கே பயன்படுத்திவந்துள்ளேன். ஏனெனில் எனது மாவட்டத்தில் வாழும் மக்களை நான் எனது மக்களாகவே பார்க்கின்றேன் என்பதினால்,
இந்த நிலையினை புரிந்து கொண்டு வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயக மண்ணில் மீள்குடியேறுவதற்கு தடையாக இருப்பவர்கள்,அதனை விடுத்து பாதிக்கப்பட்ட இந்த சமூகத்தின் கௌரவமான மீள்குடியேற்றத்துக்கு ஒத்தழைப்பு வழங்குங்கள்.என அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த நுலானது காலத்தின் தேவையுணர்ந்த்து வெளியிடப்படுகின்றது.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு அகதி முகாமில் வாழ்ந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் முசலியினை பிறப்பிடமாகக் கொண்ட இஸ்ஸதீன் றிழ்வானினால் எழுதப்பட்டுள்ளது.அவ்வாறு இன்னும் இன்னும் நுல்கள் எழுதப்பட்டு வெளியிடப்பட வேண்டும் அதன் மூலம் தான் எமது தாயகத்தின் பெறுமையும்,சிறப்பும் மேலோங்கும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அங்கு குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய யஹியான், மற்று உறுப்பினர்காளான எம்.சுபியான் ,காம்மில், மற்றும் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் ரியாஸ் சலபி, வடமாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட செயலாளர் எம்.எம்.சியான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
zamroodh Sunday, 25 September 2011 11:57 PM
இப்படி ஒவ்வொரு முஸ்லிம் தலைவர்களும் சுய நலமில்லாமல் முன்வந்தால் முஸ்லிம், தமிழ் மக்களுக்கும் நல்லது. நாட்டின் ஆரோக்கியத்துக்கும் நல்லது . உணர்வார்களா தலைவர்கள்!!??
Reply : 0 0
ruwaiz Monday, 26 September 2011 12:50 AM
அரசில் இருந்துகொண்டு இவ்வாறு சொல்லலாமா?
Reply : 0 0
Nesan Monday, 26 September 2011 05:19 AM
1980களில் மணலாறு (வெலிஓய) பகுதிகளிலிருந்து துரத்தப்பட்டவர்களை மீளக்குடியேற்றிவிட்டீர்களா?
Reply : 0 0
AR Monday, 26 September 2011 12:47 PM
நல்ல விடயங்களை எப்படி தடுக்கலாம் என்று உங்களிடம் கற்ற பாடங்களை உங்களுக்கே பிரயோகிக்கிறார்கள். சபாஷ் சரியான போட்டி.
Reply : 0 0
amr Monday, 26 September 2011 04:05 PM
அமைச்சர் அவர்களே உங்கள் துணிகரமான செயல் --- எமது மக்களின் நிலை.... தற்போதைய மீள்குடியேற்ற நிலை பற்றி தெளிவாகக் கூறி இருப்பதை இட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இருந்தாலும் பதிவியை துறப்பேன் என்ற வெற்று வார்த்தைகளில் எல்லாம் இப்போது எமக்கு நம்பிக்கையே இல்லை. அமைச்சர் அவர்களே எமது மக்களின் நிலைமையை மாற்ற காத்திரமான நடவடிக்கைகளை எடுங்கள் ..........
Reply : 0 0
MTM,SIYATH Monday, 26 September 2011 05:54 PM
வட மாகாண முஸ்லிம்கள் தொடர்பாக கூறிய விடயம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக உள்ளது. திறமையாலும், அரசியல் சானக்கியத்தாலும் நிச்சயம் வெல்ல முடியும். வஸ்ஸலாம்.
Reply : 0 0
ranees Monday, 26 September 2011 06:33 PM
புத்தகத்தை வெளியீடு செய்ய வந்தால் அவற்றைமட்டும் பற்றித்தான் அவ்விடத்தில் போச்சாக இருக்கனும் ஏன் இன்னும் மக்களை அலைய வைக்கிறீர்கள் முஸ்லீம்களைக் குடியேற்றனும் என்றவாறே உங்கள் அரசியலும் நகர்ந்து கொண்டிருக்கிறது.
Reply : 0 0
suhail Monday, 26 September 2011 09:50 PM
இலங்கையில் முஸ்லிம் தலைவர்களுக்கும் அறிக்கைகளுக்கும் பஞ்சமில்லை. ரிஷாத் அமைச்சர் அவர்களை என்னவோ என எண்ணி இருந்தோம் அவரும் சாக்குப் போக்கு சொல்லக்கூடியவர்தான் என இருப்பது மனசுக்கு கஷ்டமாக உள்ளது.
Reply : 0 0
Ashashi Monday, 26 September 2011 11:24 PM
அமைச்சரே நீங்கள்தான் அசைக்க முடியாத தலைவராச்சே. ஏன் உங்களால் முடியவில்லை?
Reply : 0 0
risimb Monday, 26 September 2011 11:28 PM
அமைச்சர் ஒன்றும் தெரியாத அப்பாவி. உங்களுக்குத் தெரியாதா ????
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
25 May 2025