2025 மே 26, திங்கட்கிழமை

புத்தளம் நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் உட்பட உறுப்பினர்கள் இருவர் இராஜினாமா

Super User   / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( அப்துல்லாஹ் )

புத்தளம்  நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் உட்பட உறுப்பினர்கள் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை இராஜினாமா செய்துள்ளனர்.

புத்தளம்  நகர சபைக்கான தேர்தலில் சுயேட்சை குழு - 08 போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட  உறுப்பினர்களான எம். எச். எம். பர்ஸீன் மற்றும்  எம்.ஏ. கியாஸ் ஆகியோரே பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இவர்களின் வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர்கள் விரைவில்  நியமிக்கப்படவுள்ளதாக குறித்த சுயேட்சை குழுவின் தலைவர் எம். ஏ.ஆர்.இனாமுல் ஹஸன் தெரிவித்தார்.  

இதேவேளை, புத்தளம் நகர சபையின் பிரதான எதிர்க்கட்சியான இந்த சுயேட்சை குழு மூலம் தெரிவு செய்யப்பட்ட இரண்டு  உறுப்பினர்கள் முன்னர் இராஜினாமா செய்யப்பட்டதையடுத்தே இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X