2025 மே 26, திங்கட்கிழமை

கலாவௌ வைத்தியசாலை திடீரென மூடப்பட்டமையால் அசௌகரியம்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

கலாவௌ கிராமிய வைத்தியசாலை நேற்று புதன்கிழமை திடீரென மூடப்பட்டமையால் சிகிச்சை பெற வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாக பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியான சந்திமா விக்கிரமசிங்கவிடம் இதுபற்றி வினவியபோது, ஊழியர்கள் எவரும் வராத நிலையில் தன்னால் மட்டும் வைத்தியசாலையை நடாத்திச் செல்ல முடியாதநிலை காணப்பட்டதால், சுகாதார செயலாளரின் அறிவுறுத்தல்களுக்கமைய மூடப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதுபற்றி மாகாண சுகாதார அமைச்சரிடம் கேட்டபோது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வைத்தியசாலையை மூடிவிட முடியாது என்றார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X