Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Kogilavani / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
தனது கர்ப்பிணி மனைவியை கூரிய கத்தியினால் வெட்டி கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கணவரை இம்மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டார்.
துட்டுவெவ பரனகம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட மனைவியும் சந்தேக நபரும் இரு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்தவர்களாவர். வயிற்றில் வளர்ந்த மூன்று மாத சிசுவை கலைத்து விடுமாறு சந்தேகநபர் அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும் இதனால் ஏற்பட்ட முறுகலே இக்கொலைக்குக் காரணம் எனவும் நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கூரிய கத்தியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் கலென்பிந்துனுவெவ பொலிஸார் நீதின்றத்தில் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
25 May 2025