Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Kogilavani / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
அநுராதபுரம் மாவட்டத்தில் நெல் கொள்வனவு அதிகார சபையினால் இதுவரையில் பத்தாயிரம் மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் கொள்வனவு அதிகார சபையின் அநுராதபுரம் வலய முகாமையாளர் பந்துல குமார தெரிவித்தார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மத்திய நிலையங்களின் ஊடாகவே இந்நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அரசாங்கம் 290 மில்லியன் ரூபா நிதியினை செலவிட்டுள்ளது.
8900 மெட்ரிக் தொன் நாடு வகை நெல்லும் 1100 மெட்ரிக் தொன் சம்பா வகை நெல்லும் இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ளது.
மஹாவலி எச் வலயத்திற்குட்பட்ட கல்நேவ, புல்நேவ மற்றும் கல்கிரியாகம பகுதிகளிலேயே அதிகளவில் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருகிறது எனவும் அநுராதபுரம் வலய முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
25 May 2025