Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவசாயிகளின் தரத்தை முன்னேற்றுவதற்காக முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா அநுராதபுரம், அம்பாறை மற்றும் மன்னார் மாவட்ட உள்ளூர் முகவர்களுக்கு உழவுக்கு பயன்படுத்துகின்ற சிறிய ரக உழவு இயந்திரங்கள் ஐந்தை கையளித்துள்ளனர்.
இந்த உள்ளூர் சமூக ஸ்தாபனங்கள் குறித்த விவசாயிகளுக்கு சாதாரன கட்டணம் அறவிட்டு இந்த சிறிய ரக உழவு இயந்திரங்களை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்கவுள்ளது.
இந்த சிறிய ரக உழவு இயந்திரங்கள் ஒவ்வொன்றும் சுமார் 220,000 ரூபாய் பெறுமதியானவையாகும்.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவுடன் இணைந்து கிராம மட்டத்தில் முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவின் செயற்திட்டங்களை செயற்படுத்தும் அமைப்புக்களுக்கே இந்த சிறிய ரக உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
25 May 2025