2025 மே 26, திங்கட்கிழமை

பாடசாலை மாணவியும் இளைஞனும் பொதுமக்களால் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

16 வயது பாடசாலை மாணவி,  22 வயது இளைஞன் ஆகியோரின் நடவடிக்கையில்  சந்தேகம் கொண்ட பொதுமக்கள் சிலர்,
அவ்விருவரையும் சிலாபம் தனியார் பஸ் நிலையத்தில் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பின்னர் இவர்களின்  பெற்றோர் மற்றும் உறவினர்களை வரவழைத்து எச்சரிக்கப்பட்ட நிலையில் விடுவித்தனர்.

குருநாகல் பிரசேத்திலிருந்து பஸ்ஸில் பாடசாலை சீருடையில்  சிலாபம் வந்த குறித்த மாணவி, தனியார் பஸ்தரிப்பிட மலசலகூடத்திற்குள் சென்று உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்துள்ளார். இருப்பினும் காலில் அணிந்திருந்த பாடசாலை சப்பாத்துக்கள் பொதுமக்களை சந்தேகப்பட வைத்துள்ளது.

குறித்த இளைஞன் வெளிநாட்டில் தொழில்  புரிந்துவிட்டு வந்தவரென தெரியவந்துள்ளது. இளைஞன் ஆசிரியரொருவரின் மகனெனவும்  மாணவியின் தாய் வெளிநாட்டில் தொழில் புரிவதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X