2025 மே 26, திங்கட்கிழமை

மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி, ரவைகள் மீட்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில்அஹமட்)               

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உக்குளாங்குளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ-56 ரக துப்பாக்கியொன்றையும் அதற்கு பயன்படுத்தும் ரவைகள் மற்றும் மெகசின் என்பவற்றையும் இன்று காலை கைப்பற்றியுள்ளதாக மிஹிந்தலை பொலிஸ் நிலைய விNஷடகுற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.                 

சேனையொன்றில் துப்புரவாக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயி ஒருவர் பொலித்தீன் ஒன்றினால் சுற்றி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியைக் கண்டுள்ளதுடன் அதுக்குறித்து மிஹிந்தலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

உடன் ஸ்தலத்தலத்துக்கு விரைந்த பொலிஸார் ரீ-56 ரக துப்பாக்கியை, அதற்கு பயன்படுததும் 27 ரவைகள், மெகசின் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.       

இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X