Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 22 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
பஸ்ஸில் பயணித்த பெண் சட்டத்தரணியொருவரை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியதுடன், தனது கையடக்கத் தொலைபேசியில் அவரைப் படம் பிடித்ததாகத் தெரிவிக்கப்படும் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
அநுராதபுரத்திலிருந்து கெக்கிராவ நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் பயணித்த அச்சட்டத்தரணி கெக்கிராவ நீதிமன்றத்திற்கு செல்லும் வழியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.
இவரது அருகில் நின்றுகொண்டிருந்த சந்தேக நபர் அப்பெண் சட்டத்தரணிக்கு தொந்தரவு கொடுத்ததுடன், அப்பெண் சட்டத்தரணி ஆசனத்தில் அமர்ந்த பின்னரும் அவருக்கு அருகிலுள்ள ஆசனத்தில் இச்சந்தேக நபர் அமர்ந்துகொண்டு தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் தன்னிடமிருந்த கையடக்கத் தொலைபேசி மூலம் அப்பெண் சட்டத்தரணியை சந்தேக நபர் படம் பிடித்துள்ளார்.
இது தொடர்பில் பஸ் நடத்துனர் மற்றும் சாரதியிடம் கூறிய அப்பெண் சட்டத்தரணி, பஸ்ஸை திறப்பனை பொலிஸ் நிலையத்துக்கு செலுத்துமாறும் கூறினார்.
அப்பெண் சட்டத்தரணி பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago