Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 22 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
மஹவ நகரை அண்மித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நீண்டகாலமாக நடத்தப்பட்டு வந்த போலி கச்சேரி ஒன்றை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியதில் பெருமளவு போலி ஆவணங்கள் மற்றும் இவற்றை தயாரிக்க பயன்படுத்தியதாக நம்பப்படும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சந்தேகநபர் ஒருவரையும் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் கைது செய்ததாக மஹவ பொலிஸார் தெரிவித்தனர்.
மஹவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினடிப்படையில் குறித்த வீட்டை சுற்றிவளைத்த பொலிஸ் குழு போலி கச்சேரி அமைந்திருந்த வீட்டறையினை கண்டு பிடித்ததுடன் அங்கிருந்து போலியாக தயாரித்து வைக்கப்படடிருந்த பெருமளவு பிறப்புச்சான்றிதழ்கள், கடவுச்சீட்டுக்கள், பொலிஸ் சான்றிதழ்கள் என்பவற்றுடன் இவற்றை தயாரிக்க பயன்படுத்தியதாக நம்பப்படும் பக்ஸ் இயந்திரத்துடன்கூடிய நவீனவகையிலான போட்டோகொப்பி இயந்திரம், திணைக்களங்கள் மற்றும் அரச அலுவலகங்களின் ரப்பர் முத்திரைகள் இரும்புச்சீல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் வீட்டுரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கைப்பற்;றப்பட்ட போலி ஆவணங்கள் மற்றும் உபகரணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படடு வருவதாகவும் மஹவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago