Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 23 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
ஆளும்கட்சி ஆதரவாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கருவலகஸ்வௌ பிரதேச சபையின் தலைவர் நீல் வீரசிங்க, சாலியவெவ பொலிஸாரால் இன்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த ஆதரவாளர் நொச்சியாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று தெரிவித்த சாலியவெவ பொலிஸார், கைதான பிரதேச சபைத் தலைவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
இதேவேளை, ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என்று மேற்படி பிரதேசசபைத் தலைவருக்கு எதிராக சாலியவௌ மற்றும் கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையங்களில் இதற்கு முன்னரும் முறைப்பாடுகள் பல கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago