2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

Kogilavani   / 2011 நவம்பர் 23 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)
புத்தளம் மாவட்ட  ஊடகவியலாளர்களுக்கான  செயலமர்வொன்று எதிர்வரும் 26ஆம் திகதி  சனிக்கிழமை சிலாபம் சிட்டி ஹோட்டலில்  நடைபெறவுள்ளது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் அனுசரணையில்  புத்தளம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இச்செயலமர்வில், புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த 70 ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.    

ஊடகத்துறை தொடர்பான விரிவுரைகள், விவாதங்கள்,  செயல் முறை பயிற்சிகள்  என்பனவும்  இச் செயலமர்வில் இடம்பெறவுள்ளது.  
செயலமர்வு  முழுநாள் செயலமர்வாக நடைபெறவுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X