Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 27 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
அநுராதபுரம், பொத்தானேகம பகுதியிலுள்ள ஒருவரின் புதிய மோட்டார் சைக்கிளை சூசகமாக ஒருவர் எடுத்துச்சென்ற சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்தானேகம பகுதியிலுள்ள மோட்டார் சைக்கிள் உரிமையாளரின் வீட்டில் செங்கல் ஏற்றுவதற்காக லொறியில் வந்த சந்தேக நபர், அநுராதபுரம் நகருக்குச் சென்று வரவேண்டியிருப்பதாகத் தெரிவித்து அவ்வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிள் உரிமையாளரின் மகனையும் மோட்டார் சைக்கிளிலில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். இவ்வாறு சென்ற நபர் தலைக்கவசம் இல்லையெனக் கூறி அச்சிறுவனை இடைவழியில் இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளுடன் தப்பிச்சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து உறவினனொருவரின் உதவியுடன் தனது வீட்டிற்கு திரும்பிய அச்சிறுவன் நடந்தவற்றை வீட்டாரிடம் கூறினான். அச்சிறுவனின் தந்தையான மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இது குறித்து அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
shajahan Sunday, 27 November 2011 07:42 PM
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago