2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் பெண் பலி

Super User   / 2011 நவம்பர் 28 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

நெலுங்குளம்,  கல்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியான உதவி பரிசோதகர் பாலித்த நிஸ்ஸங்க தெரிவித்தார்.

முச்சக்கர வண்டியொன்று பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணை பின் பக்கத்தால் மோதியுள்ளதுடன் குறித்த முச்சக்கரவண்டி நிறுத்தாமல் தலைமறைவாகியுள்ளது.

இதன் பின் பிரதேசவாசிகள் படுகாயமடைந்த நிலையிலிருந்த குறித்த பெண்ணை அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற போது மரணமடைந்துள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் நெலுங்குளம் பகுதியைச் சேர்ந்த பீ.சிரியாணி குமாரி என்பவராவார்.

குறித்த முச்சக்கர வண்டியை இன்று திங்கட்கிழமை கண்டுபிடித்த பொலிஸார், அதன் சாரதியை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸ் பரிசோதகர் பாலித்த நிஸ்ஸங்க மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X