Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
அரச வங்கியொன்றின் ரேலர் இயந்திரத்தின் மூலம் ரூபா 40,000 பணத்தினை முறைகேடான முறையில் களவாடிய நபர் ஒருவரைக் கைது செய்வதற்காக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திஸாவௌ, பண்டுலகம பகுதியில் கடமை புரியும் இராணுவ வீரர் ஒருவருக்குச் சொந்தமான ரேலர் இயந்திர அட்டையினைப் பயன்படுத்தி இந்நிதி மோசடியில் சந்தேகநபர் ஈடுபட்டுள்ளார்.
இந்த அட்டையினை இதற்கு முன்னர் தனக்குச் சொந்தமான ஒருவரிடம் பணம் பெறுவதற்காக கொடுத்ததாக படை வீரர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ரேலர் இயந்திரத்தின் பாதுகாப்பு கெமராவினைப் பரிசோதித்த பின்னர் சந்தேகநபரைக் கைது செய்துகொள்ள முடியும் என அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பல்முறைப்பாட்டுப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago