2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

யானை தாக்கி பெண் பலி

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 25 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

அநுராதபுரம் சிராவஸ்திபுர பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை  வயோதிபப் பெண் ஒருவர்  யானை தாக்கி மரணமடைந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிராவஸ்திபுர வீரவௌ பகுதியைச் சேர்ந்த ஆர்.ஏ.தயாவதி (வயது 65) என்பவரே யானை தாக்கி மரணமடைந்தவர் ஆவார்.

தனியாக வசித்து வந்த இப்பெண்ணை தாக்கிய யானை,  சடலத்திற்கு அருகில் எவரும் நெருங்க முடியாத வகையில் நின்றுள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த   வனப்பாதுகாப்பு அதிகாரிகள் யானையை விரட்டிவிட்டு சடலத்தை மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X