Suganthini Ratnam / 2012 ஜனவரி 25 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
அநுராதபுர மாவட்டத்தின் ஸ்ரீபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திவெவ பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் சில நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீபுர பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து குறித்த வீட்டில் பொலிஸாரால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது ஒரு ரி - 56 ரக துப்பாக்கி, ஒரு அனுமதிப்பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கி, 3 கட்டுத்துவக்குகள், இவற்றுக்கு பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட தோட்டாக்கள் ஆகியன மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago